தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/நைக் தேவதை !

நைக் தேவதை !

நைக் தேவதை !


PUBLISHED ON : செப் 10, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 10, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிரேக்க இதிகாசங்களில் அறிவு, அமைதி போர் ஆகியவற்றின் கடவுளாக கருதப்படுபவள் அதீனா. கன்னி அதீனா கிரேக்கர்களின் காவல் தெய்வம்.

அதீனா என்னும் அறிவு தேவதை, போர்க்களத்தில் தர்மத்தின் பக்கம் நின்று அறம் வெல்ல துணைபுரிகிறாள் என்பது கிரேக்கர்களின் மாறாத நம்பிக்கை. கிரேக்க இதிகாசங்களில் போர் அணிகலன்களை அணிந்து காணப்படும் அதீனா, ஓடிஸிஸ் மற்றும் ஹெர்குலஸ் போன்ற வீரர்களின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் கடவுளாக கருதப்படுகிறாள்.

அதீரா எப்போதுமே ஆண்துணையின்றி காட்சி தந்தமையால் அவள் அதீனா பார்தெனாள், அதாவது கன்னி அதீனா என அழைக்கப்பட்டாள்.

ஏதன்ஸ் நகரின் அக்ரோபாலிஸில் அவளுக்கென்று எழும்பப்பட்ட ஆலயம் பார்த்தெனாள் என்று அழைக்கப்படுகிறது.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்ட பார்த்தெனாள் ஆலயத்தில் இன்று எஞ்சியிருக்கும், பிரமாண்டமான தூண்களைக் கொண்ட இடிபாடுகளைக் கண்டாலே அதீனாவை அந்நாட்களில் கிரேக்கர்கள் எவ்வளவு தூரம் போற்றினர் என்பது புலப்படும். ஏதென்ஸ் நகரின் காவல் தெய்வமாக கருதப்படும் கன்னி அதீனாவின் வரலாறு மிகவும் விசித்திரமானதாகும்.

அனைத்துக் கடவுள்களின் கடவுளான ஜீயஸ் மற்றும் ஞானத்தின் உருவான மேதிஸ் ஆகிய இருவருக்கும் பிறந்த குழந்தையே ஆதீனா. ஆயினும் அவளின் பிறப்பு மிகவும் விநோதமான முறையில் நிகழ்ந்தது. உச்சக் கடவுளான ஜீயஸ் மற்றும் மேதிஸ் ஆகிய இருவருக்கும் பிறக்கும் குழந்தை  ஜீயஸை விடவும் மேம்பட்ட கடவுளாக விளங்கும் என மக்கள் நம்பினர். இதனால் ஜீயஸ் தனக்குப் பிறக்க இருக்கும் குழந்தை மீதே பொறாமை கொண்டார். அப்போதும் தானே முதற் கடவுளாக விளங்க வேண்டும் என்ற எண்ணத்தில் மோதிஸின் கருவில், குழந்தை அதீனா இருக்கும் போதே மேதிஸை விழுங்கினார்.

அதீனாவோ ஜீயஸின் உடலுக்குள்ளேயே பிறந்தாள். அந்த உடலிலேயே வளர்ந்த அவள், முழுவடிவத்தை அடைந்த பிறகு, இடியை ஆயுதமாக ஏந்திக் கொண்டு ஜீயஸின் நெற்றியிலிருந்து சிறந்த வீராங்கனையாக வெளிப்பட்டாள்.  அதீனாவை காவல் தெய்வமாக ஏற்றுக் கொண்ட கிரேக்கர்கள் தங்களுடைய பெருமை வாய்ந்த ஒரு நகரத்திற்கு, 'ஏதென்ஸ்' என்று பெயர் சூட்டீனர். 'நைக்' என்னும் வெற்றி தேவதை, காவல் தெய்வம் அதீனாவுடன் எப்போதும் சேர்ந்தே காணப்படுவாள்.  'நைக்' என்பது வெற்றியை குறிக்கும் என்பதால்தான் விளையாட்டு வீரர்கள் அணிவதற்காக காலணிகளைத் தயாரித்த ஒரு நிறுவனம் தனது தயாரிப்புகளுக்கு, 'நைக்' என்று பெயர் சூட்டியது.  'நைக்' இன்று வெகு பிரபலமான பெயர். இந்தப் பெயரில் ஷூக்களைத் தயாரித்த, 'நைக்' நிறுவனம் சக்கைபோடு போடுகிறது. உலகெங்கிலும் உள்ள மக்கள் 'நைக் ஷூ' அணிவதை ஒரு கவுரவமாக கருதுகின்றனர்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us