தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/கெட்டு போவதில்லை!

கெட்டு போவதில்லை!

கெட்டு போவதில்லை!


PUBLISHED ON : ஜூன் 21, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 21, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கோவிலுார், அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில், 1964ல், 6ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்!

சுதந்திர போராட்ட தியாகி, ராமசாமி நாய்க்கர், ஏழை மாணவர்களுக்காக, 'சேவக சங்க விடுதி' ஒன்றை திருக்கோவிலுாரில், நடத்தி வந்தார். அதில், உணவு, உடை, தங்குமிடம் இலவசம்.

ஒரு நாள், அந்த விடுதி காப்பாளர் ஜெயராம முதலியார், எங்கள் பள்ளி தலைமை ஆசிரியரை சந்தித்து, 'விடுதியில், ஒரு இடம் காலியாக உள்ளது...' என்று கூறினார்.

'யாருக்காவது விடுதியில் தங்க விருப்பமா...' என கேட்டார் தலைமையாசிரியர்.

உடனே மாணவர்கள், 'நான்... நீ...' என்று போட்டி போட்டனர். பரீட்சை நடத்தி, தேர்வு செய்ய முடிவு செய்தார் தலைமை ஆசிரியர்; அதில், நான் வெற்றி பெற்றேன்.

மறுநாள், விடுதியில் சேர தந்தையோடு சென்றேன்; எனக்கு முன், மாணவன் ஒருவன், தாயுடன் அங்கு காத்துக் கொண்டிருந்தான்.

காப்பாளர், அந்த பெண்ணை விசாரித்தார். அவர், 'இவன், என் மகன்; 6ம் வகுப்பு படிக்கிறான்; கணவர் இறந்து விட்டதால் படிக்க வைக்க வசதியில்லை. விடுதியில் சேர்த்துக்கங்க...' என்று கெஞ்சினார்.

அதைப் பார்த்து, என் மனம் கலங்கியது.

காப்பாளரிடம், 'ஐயா... எனக்கு பதில், இவனை சேர்த்துக்குங்க...' என்று கூறினேன்.

'தம்பி... விட்டுக் கொடுப்பது சிறந்த குணம்; நீ உயர்ந்த நிலைக்கு வருவாய்...' என்று ஆசிர்வதித்தார்.

மூன்று மாதத்திற்குள், முயற்சி எடுத்து, என்னையும், அதே விடுதியில் சேர்த்தார் காப்பாளர். பள்ளி படிப்பை சிறப்பாக முடித்தேன்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் உயர் பதவியில், 30 ஆண்டுகள் பணியாற்றி, ஓய்வு பெற்றேன்.

எனக்கு, 65 வயதாகிறது.

'விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை' என்பதை உணர்ந்து, இன்றும் கடைப்பிடித்து வருகிறேன்.

- கனக.கு.ராமசாமி, விழுப்புரம்.

தொடர்புக்கு: 97517 80846


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us