PUBLISHED ON : ஜூலை 20, 2018

அ நிறம் | அளவு
தேவையானப் பொருட்கள்:
இளசான நுங்கு - 10
பால் - 2 கப்
சோளமாவு - அரை கப்
பாதாம் - 5
சர்க்கரை - 1 கப்
தேன் - 2 தேக்கரண்டி
செய்முறை:
பாதாமை ஊற வைத்து, தோலுரித்து, விழுதாக அரைக்கவும். நுங்கின் தோலை எடுத்து விட்டு அரைக்கவும். பாலில், சோளமாவு சேர்த்து, கட்டி இல்லாமல் கலந்து, அடுப்பில் வைத்து, கிளறவும். தேங்காய், சர்க்கரை சேர்க்கவும். கெட்டியாக, 'பள... பள...' என வரும் போது, அடுப்பை அணைக்கவும்.
நன்கு ஆறியதும், அரைத்த நுங்கு சேர்த்து, மிக்சியில் அடித்து, கிண்ணத்தில் போட்டு, ப்ரீசரில், நான்கு மணி நேரம் வைக்கவும். வெளியில் எடுத்து, மேலாக தேன் சேர்த்து, 'ஜில்'லென பரிமாறவும்.
- ர.கிருஷ்ணவேணி, சென்னை.
