தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/சந்தர்ப்பச் சிலை!

சந்தர்ப்பச் சிலை!

சந்தர்ப்பச் சிலை!


PUBLISHED ON : மே 09, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 09, 2014


Follow on Google
அ நிறம் | அளவு

ஒரு மனிதனை நோக்கி சந்தர்ப்பம் எவ்வாறு எப்போது வருகிறது? எப்படி நழுவிப் போய்விடுகிறது என்பதைப் பற்றி சிற்பம் ஒன்று வடிக்க ஆசை வந்தது கிரேக்க நாட்டைச் சேர்ந்த சிற்பி ஒருவருக்கு. அப்படியே சிலை ஒன்றையும் வடித்தார் அவர்.

அந்தச் சந்தர்ப்பச் சிலைக்கு இரண்டு இறக்கைகள் இருந்தன. முன்னந் தலையில் நிறைய கூந்தல் இருந்தது. ஆனால், பின்னந்தலை வழுக்கையாக இருந்தது. இதனிடையே அச்சிலை பெருவிரலை மட்டும் தரையில் ஊன்றி நின்று கொண்டிருந்தது.

பார்ப்பதற்கு வித்தியாசமாக தோன்றியதால் பலருக்கும் சந்தேகம் எழுந்தது. உடனே சிற்பியிடம், ''இந்தச் சிலைக்கும், சந்தர்ப்பத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது?'' என்று கேட்டனர்.

அவர்களைப் பார்த்து அர்த்தத்துடன் சிரித்த அந்தச் சிற்பி, அந்தச் சிலையில் அடங்கி இருக்கும் கருத்துக்களைப் பிட்டுப்பிட்டு வைத்தார்.

''இந்தச் சிலைக்கு இரண்டு இறக்கைகள் உள்ளன. எதற்கென்றால், மக்களை நோக்கிப் பறந்து செல்வதற்காக. அப்புறம் முன்னந் தலையில் கூந்தல் இருப்பது எதற்காகத் தெரியுமா? அப்போது மக்கள் என் கூந்தலைச் சிக்கென்று பற்றிக் கொள்வதற்காகத் தான்.

''அது கால் பெருவிரலை மட்டும் ஊன்றி நிற்பது எதற்காக என்றால், சந்தர்ப்பத்தைப் புரிந்து கொண்டு அதனைப் பயன்படுத்தாமல் முட்டாளாக இருப்பவர்களிடம் இருந்து சற்றும் தாமதிக்காமல் உடனே பறந்து விடுவதற்காக.

''இவ்வாறு சந்தர்ப்பத்தைத் தவற விட்டவர்கள் நான் பறக்க முற்படும்போது என்னைப் பற்றிப் பிடித்துக் கொள்ளாமல் இருப்பதற்காகத்தான் இச்சிலையின் பின்னந்தலை வழுக்கையாக அமைக்கப்பட்டுள்ளது,'' என்று விளக்கமளித்தார் அந்தச் சிற்பி.

கேட்டவர்கள் வியந்து போயினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us