தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/முதுமை!

முதுமை!

முதுமை!


PUBLISHED ON : ஜூன் 17, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 17, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இளமை பருவம் இனிமையானது. உடல் முதுமை அடைவதை மனம் ஏற்காது. ஆனாலும், இயற்கையாக அது நிகழும். அதை நல்ல உணவுகள் சாப்பிட்டு கட்டுப்படுத்தலாம்.

சில உணவுகளை அடிக்கடி சாப்பிட்டால், விரைவில் முதுமை தோற்றம் ஏற்படும். சில முதுமை வருவதை தாமதப்படுத்தும்.

உணவில் உப்பு அதிகமாக சேர்த்தால் உடலில் நீரிழப்பு ஏற்படும். சிறுநீரக பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். சோர்வையும், முதிர்ந்த தோற்றத்தையும் தரும்.

அதிக இனிப்பு உட்கொண்டால் உடலில் கொழுப்பு அளவு அதிகரிக்கும். உடல் எடை கூடும். தோலில் சுருக்கம் ஏற்படும்.

பதப்படுத்திய கொழுப்பு நிறைந்த இறைச்சி உணவு உடலுக்கு ஏற்றதல்ல. அது நோய் எதிர்ப்பு திறனை குறைக்கும். தொடர்ச்சியாக உண்டால் கடுமையான உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும். ஆரோக்கியமான உணவை அறிந்து உட்கொள்வோம்.

- மு.நாவம்மா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us