தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அழிவுப்பாதையில்...!

அழிவுப்பாதையில்...!

அழிவுப்பாதையில்...!


PUBLISHED ON : நவ 16, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 16, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிரிட்டிஷ் ராயல் பொட்டானிகல் கார்டன் என்ற தாவரவியல் பூங்கா, ஐரோப்பாவில் உள்ள இங்கிலாந்து லண்டன் அருகே, கெலி என்ற பகுதியில் அமைந்துள்ளது. இதன் இயக்குனர் கேதி வில்லிஸ், உலகில், நிரந்தரமாக அழியவுள்ள தாவரங்கள் பற்றி, ஆய்வு நடத்தி, தகவல்களை தொகுத்துள்ளார்.

உலகில் உள்ள தாவரங்களில்,

21 சதவீதம் நிரந்தரமாக அழியும் நிலையில் உள்ளன. இதற்கு, முக்கிய காரணம், விவசாயம் தான்.

மரங்களை வெட்டுவதால், 21.3 சதவீதமும், கட்டட வேலைகளால், 12.8 சதவீதமும் அழிக்கும் நிலையில் உள்ளன. பருவ நிலை மாற்றத்தால், 3.96 சதவீதம் அழிவுப்பாதையில் உள்ளன. குடியேற்றம், அணைக்கட்டுகள், பெரும் தீ போன்றவற்றாலும் தாவரங்கள் அழிகின்றன.

உலகில், 1,771 இடங்கள், முக்கிய தாவரவியல் கேந்திரங்களாக கணிக்கப் பட்டுள்ளன. இந்த இடங்களை பாதுகாப்பதால் தாவரங்கள் அழிவை தடுக்கலாம்.

இந்த நிலையில், புதிய தாவரங்களும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலானவை, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்காவில் பிரேசில் மற்றும் ஆசியாவில் சீனா பகுதிகளில் உள்ளன.

புதிதாக கண்டுபிடித்த தாவரங்களில்...

* 17ஆயிரத்து, 810 மருத்துவத்திற்கு உதவுவை

* 5,538 உணவுக்கு பயன்படுபவை

* 3,649 விலங்குகளுக்கு உணவாகுபவை

* 1,621 எரிபொருளாக பயன்படுபவை

உலகம் முழுவதும், 14 ஆயிரத்து, 781 தாவர இனங்கள், 7,330 மீன்கள், 4,200 பறவைகள், 3,221 பாலுாட்டிகள் அழியும் நிலையில் உள்ளதாக உலக வங்கி கூறுகிறது.

உயிரினங்களை அழிவில் இருந்து மீட்பது, அனைவரின் கடமையாகும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us