/
இணைப்பு மலர்
/
சிறுவர் மலர்
/
மெரீனா பீச்சில் குட்டீஸ்களுடன் ஒருநாள்...
/
மெரீனா பீச்சில் குட்டீஸ்களுடன் ஒருநாள்...
PUBLISHED ON : மே 19, 2016

தினமலர்-சிறுவர்மலர் சார்பில் ஏப்ரல் 30, 2016 அன்று சென்னை மெரினா பீச்சில், 'சம்மர் கேம்ஸ்' நடத்தப்பட்டது. ஒரு நிமிடத்தில் ஓவியம் வரைதல், பிழையின்றி தமிழ் வார்த்தைகள் எழுதுதல், கவிதை, திருக்குறள் ஒப்பித்தல், எழுதுதல் என நிறைய போட்டிகள் வைக்கப்பட்டன.
அதில் மிகுந்த ஆர்வத்துடன் குடும்பம் குடும்பமாக பங்கேற்றனர். தினமலர்-சிறுவர்மலர் என பெயர் பொறித்த டீஷர்ட்ஸ், அழகிய பென்சில் பாக்ஸ்கள் மற்றும் கீ-செயின்கள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற குட்டீஸ்கள் மகிழ்ச்சியுடன் பரிசுகளை பெற்றுக் கொண்டனர்.
பிளஸ் 2 மாணவிகள் கூறும்போது... புதிய பகுதிகளுடன் வந்து கொண்டிருக்கும் சிறுவர்மலர் இதழில் ஏராளமான போட்டிகள் உள்ளது. இனி அந்த போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வெல்வோம் என்றனர்.