PUBLISHED ON : ஆக 31, 2018

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்:
ரவை - 1 கப்
சர்க்கரை - 2 கப்
ஆரஞ்சுப் பழம் - 2
நெய் - 2 தேக்கரண்டி
முந்திரி, திராட்சை - சிறிதளவு
ஏலக்காய் - 5
கேசரி பவுடர் - தேவைக்கு ஏற்ப
செய்முறை:
ரவையை, நன்றாக வறுக்கவும். ஆரஞ்சு சுளையை அல்லது ஆரஞ்சு பழச்சாறை தண்ணீருடன் சேர்த்து, கொதிக்க வைக்கவும். தேவைப்பட்டால், கேசரி பவுடர் சேர்க்கவும். கொதி நிலைக்கு வந்தவுடன், வறுத்த ரவையை, சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும்.
பிறகு, ஏலக்காய் பொடி, சர்க்கரையும் சேர்த்து, பதமாக கிளறவும்.
வாணலியில் நெய் ஊற்றி, அதில், முந்திரி, திராட்சையை, பொன்னிறமாக வறுத்து, கேசரி கலவையுடன் சேர்த்தால், சுவையான ஆரஞ்சுப் பழக் கேசரி தயார்!
மாலை நேர சிற்றுண்டியாக கொடுத்தால், களைப்பு நீங்கி, குழந்தைகள் புத்துணர்வு பெறுவர்!
- ஆர்.செல்லமீனல், புனே.
