PUBLISHED ON : மே 25, 2018

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்:
அரிசி - 100 கிராம்
பருப்பு - 200 கிராம்
பப்பாளிகாய் - 200 கிராம்
சீரகம் - ஐந்து கிராம்
காய்ந்த மிளகாய் - ஏழு
கருவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி -சிறிதளவு
உப்பு - தேவைகேற்ப
எண்ணெய் - தேவைகேற்ப.
செய்முறை:
பப்பாளி காயின் தோலை நீக்கி, துருவிக் கொள்ளவும். அரிசி, துவரம் பருப்பு இரண்டையும், ஒன்றைமணி நேரம் ஊற வைத்து, அரைத்து கொள்ளவும். அதில், மிளகாய், சீரகம்இரண்டையும் அரைத்து கலக்கவும். அத்துடன், துருவி வைத்த பப்பாளி காய், கொத்தமல்லி தழை சேர்த்து, தோசை மாவு பதத்தில் கரைத்து அடையாக வார்த்து எடுக்கவும்; இதுவே, பப்பாளி அடை; சத்து மிகுந்தது.
- மு.பூங்கோதை, கடலுார்.
