தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/சிறுதுளி பெருவெள்ளம்!

சிறுதுளி பெருவெள்ளம்!

சிறுதுளி பெருவெள்ளம்!


PUBLISHED ON : செப் 07, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 07, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை மாவட்டம், தாசனுார் நடுநிலைப் பள்ளியில், 7ம் வகுப்பு படித்தேன். அப்போது, ஆசிரியர் கண்ணப்பன், சிறுசேமிப்பு பற்றி பாடம் நடத்தினார். 'கூலி வேலை செய்து, படிக்க வைக்கும் பெற்றோருக்கு, சுமையாய் இருக்க கூடாது' என, அப்போது முடிவு எடுத்தேன்.

அதை செயல்படுத்தும் வகையில், தினமும், அப்பா தரும், ஐந்து காசுகளை, ஒரு, டப்பாவில் போட்டு, சேமிக்க ஆரம்பித்தேன். இரண்டு ரூபாய் ஆனதும், இரண்டு கோழி குஞ்சுகள் வாங்கினேன். அவை வளர்ந்து, முட்டையிட்டு, ஒரே ஆண்டில், 20 கோழிகளாயின. தந்தை உதவியுடன், அவற்றை விற்று, ஒரு ஆட்டுக்குட்டி வாங்கினேன். அது வளர்ந்து ஒரே ஆண்டில், இரண்டு குட்டிகளை ஈன்றது.

பின், படிப்பு, துணிமணி, நோட்டு, பென்சில் என, எனக்கு தேவை ஏற்பட்ட போது, ஒரு ஆட்டை விற்று, பூர்த்தி செய்து கொள்ள, உதவியாக இருந்தது. ஒவ்வொரு ஆண்டும், ஆடுகள் குட்டி போட்டு பெருகின.

பள்ளியில், 10ம் வகுப்பில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றேன். என்னை, பாராட்டி பேசிய ஆசிரியர், 'சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல், சிறுசேமிப்பு, வாழ்க்கையை மாற்றி விடும். அதற்கு, இந்த சிறுமியே உதாரணம்...' என, சுட்டிக்காட்டி கூறிய போது, என் பெற்றோர் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். அனைவரும் பாராட்டினர். இது, 40 ஆண்டுகளுக்கு முன் நடந்தது.

அன்று கற்ற பாடத்தை, மகன்கள், பேரன், பேத்திகளுக்கும் சொல்லிக் கொடுத்து, சேமிக்க வைக்கிறேன்.

- சி.லிங்கம்மாள், கோவை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us