PUBLISHED ON : ஜூலை 10, 2021

தேவையான பொருட்கள்:
சோளம், ராகி, கம்பு மாவு - தலா 50 கிராம்
கோதுமை மாவு - 300 கிராம்
கேரட் துருவல் - 1 கப்
நறுக்கிய பீன்ஸ் - 1 கப்
பெரிய வெங்காயம் நறுக்கியது - 1 கப்
கடலைபருப்பு, உளுந்தம் பருப்பு - தலா 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
சீரகம், உப்பு, கடுகு, எண்ணெய், கறிவேப்பிலை, தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு கறிவேப்பிலை, வெங்காயம், கேரட், பீன்ஸ், நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
இந்த கலவையில், சோளம், ராகி, கம்பு, கோதுமை மாவுகளை சேர்த்து, உப்பு போட்டு, வென்னீர் ஊற்றி பிசையவும்.
இதை சப்பாத்தியாக்கி, நன்றாக வேகவிடவும். சுவைமிக்க, 'சிறுதானிய காய்கறி சப்பாத்தி' தயார். இதிலேயே, உப்பு, காரம் இருப்பதால், 'சைடிஷ்' தேவை இல்லை. அப்படியே உண்ணலாம்; ஆரோக்கியம் தரும். அனைவரும் விரும்புவர்.
- ப்ரேமி கிரிஜா ராமநாதன், கோவை.
தொடர்புக்கு: 94440 77507

