தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வாய் பேச்சில் வீரர்கள்!

வாய் பேச்சில் வீரர்கள்!

வாய் பேச்சில் வீரர்கள்!


PUBLISHED ON : மே 20, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 20, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நண்பர்கள் ஒருநாள் மாலையில் மற்றோர் ஊருக்குப் புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் சென்று அடைய வேண்டிய ஊர் முப்பது மைல் தொலைவில் இருந்தது. பகலில் சூரியனின் கொடுமை மிகுதியாக இருந்ததால், அவர்கள் பொழுது சாய்கிற மாலை வேளையில் புறப்பட்டு, இரவில் பயணம் செய்வது என்று முடிவு செய்து புறப்பட்டுச் சென்றனர்.

இரவில் நிலவொளியும் இருந்தது. சில பொருள்கள் வாங்குவதற்காக அவர்கள் கையிலே தேவையான அளவு பணமும் எடுத்துக் கொண்டு சென்றனர். அவ்வாறு சென்றவர்கள் அனைவரும் நன்கு உண்டு கொழுத்த குண்டுத் தடியர்கள். போதாக் குறைக்கு அவர்களிடத்திலே ஆளுக்கு ஒரு தடியும் இருந்தது.

அவர்கள் சென்ற வழியிலே ஊர்கள் மிகுதியாக இல்லை. அவர்கள் அனைவரும் உடல் வலிமையும், வாய் வீரமும் உடையவர்களாக இருந்தார்களேயல்லாமல், ஒருவரிடத்திலும் வீரம் இல்லை. ஆனால், வழியில் கள்வர்கள் வந்து எதிர்த்தால், அக்கள்வர்களை அடித்துத் தள்ளி விடுவதாக வாய் வீரம் பேசிக் கொண்டு சென்றனர்.

அவர்களுடைய பயணத்தில் நள்ளிரவு வந்து சேர்ந்தது. அப்போது அவர்கள் சென்று கொண்டிருந்த இடம், அண்மையில் வீடு வாசல்கள் இல்லாத இடமாக இருந்தது. கள்வர்கள் பதுங்கி இருப்பதற்கு ஏற்ற இடமாக இருந்தது. அந்த இடத்தில் வழிப்போக்கர்கள் பகலிற்கூட அஞ்சிக் கொண்டுதான் செல்வர்.

அத்தகைய இடத்தில் குண்டுத் தடியர்கள் சென்று கொண்டிருக்கும் போது, திடீரென்று இரண்டு கள்வர்கள் எதிரே வந்து அவர்களை மறித்தனர்.

''கையில் உள்ளதைக் கொடுத்து விடுங்கள்!'' என்றனர்.

கள்வர்கள் இரண்டு பேர்களாக இருந்துங்கூட அக்கள்வர்களைத் தடியர்களால் எதிர்த்துத் தாக்க முடியவில்லை. ஆகையால் தடியர்கள் மறு பேச்சுப் பேசாமல் தங்கள் கையிலிருந்த பணத்தைக் கள்வர்களிடம் கொடுத்து விட்டனர். கள்வர்களின் மிரட்டலில் அஞ்சி நடுங்கி நின்றனர்.

அக்கள்வர்களிருவரில் ஒருவன் மற்றவனைப் பார்த்து, ''சும்மா விட்டு விட்டுப் போகக்கூடாது. மண்டையில் ஆளுக்கு இரண்டு வீதம் போடு!'' என்று கூறினான்.

அதைக் கேட்ட அளவில் தடியர்கள் மூலைக்கொருவராக ஓட்டம் பிடித்தனர். கள்வர்கள், தடியர்களில் சிலரை சிறிது தூரம் வரை விரட்டிச் சென்று விட்டுவிட்டு, பின்னர் தம் வழியே சென்றுவிட்டனர்.

கள்வர்கள் சென்று விட்டனர் என்று கண்டபின் தடியர்கள் அனைவரும் ஒன்றுகூடி, ஒருவர் மற்றவர் மீது வீரம் இல்லை என்று குறை கூறி, ஒருவரோடொருவர் சண்டையிட்டுக் கொண்டு வந்த வழியே திரும்பிச் சென்றனர்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us