
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நினைவாற்றலை அதிகரிக்கும் மாதுளம் பழம்; சிவப்பு நிற முத்துக்களால் கண்ணைக் கவரும். இதில் உள்ள, 'பாலி பீனால்' என்ற பொருளே இதற்கு காரணம். மாதுளம் பழத்தில், போலோட், பொட்டாஷியம், நார், புரதம், வைட்டமின் சி, ஈ, கே., போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
மாதுளம் பழத்தை சாப்பிட்டால்...
* மூட்டில் வீக்கத்தை தடுத்து வலி வராமல் பாதுகாக்கும்
* எலும்பு தேய்மானத்தை குறைக்கும்
* இதயத்தில் கொழுப்பை கரைத்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும்
* ரத்த குழாய்கள் இறுகாமல் காக்கும்
* வறட்டு இருமலை குணமாக்கும்
* குடல் செரிமானப் பாதையை வலுப்படுத்தும்
* கண்கள் பிரகாசமடையும்
* இரைப்பையை சுத்தப்படுத்தி, செரிமானத்தை துாண்டும்.
மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்தாகும். மாதுளம் பழத்தை சாப்பிட்டு ஆரோக்கியம் பேணுவோம்!
- எஸ்.ராமதாஸ்

