PUBLISHED ON : ஜன 11, 2013
அ நிறம் | அளவு
பொங்கல் அன்று பொங்கல் வைத்த பானையை முற்றிலுமாக காலிசெய்ய கூடாது என்று ஒரு சம்பிரதாயம் உண்டு. சிறிதளவாவது மிச்சம் வைத்து மறுநாள் மேற்கொள்ளப்படும் காணும் பொங்கல் பூஜைக்காக வைத்து கொள்வது வழக்கம். அடுத்த நாள் காணும் பண்டிகை. இது பெண்களுக்கு உரிய பண்டிகை. முந்தினநாள் பொங்கல் பானையில் கட்டி வைத்திருந்த அந்த மஞ்சள் கிழங்கை எடுத்து, வீட்டிலுள்ள வயது முதிர்ந்த சுமங்கலி பெண்மணிகளிடம் கொடுப்பார்கள்.
அவர்கள் அதை கல்லில் இழைத்து, அந்த பெண்களின் நெற்றியில் தீற்றிவிட்டு தாமும் தீற்றி கொள்வர். அப்படி முதியவர்கள் இல்லாத வீட்டில், கணவரிடமே அவ்வாறு செய்துவிடுமாறு கேட்டு கொள்வர். இது தன் கணவர் நீண்டநாள் வாழ வேண்டும் என்ற பிரார்த்தனையாகவும், அவருக்கு எந்த உடல்நல பாதிப்பும் வரக் கூடாது என்ற வேண்டுதலாகவும் அமையும்.
