PUBLISHED ON : செப் 23, 2016

அ நிறம் | அளவு
அப்போது இந்தியாவில் இப்போது பாகிஸ்தானில் இருக்கும் பான் கிராமத்தில் மிகவும் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் ஓபராய்.
ஆறு மாதத்தில் தந்தையை இழந்தார். கல்வி கற்க வசதியில்லை. இளம் வயதிலேயே திருமணம். சிம்லாவில் ஒரு ஓட்டலில் வேலை. மாதச் சம்பளம், 40 ரூபாய். சம்பளம் உயர்ந்து நூறாகியது. ஓட்டல் அனுபவம் கூடியது.
கான்ட்ராக்ட் அடிப்படையில் ஓர் ஓட்டலை ஆரம்பித்தார். தன்னிடமிருந்த அத்தனையும் விற்று ஒரு நொடிந்த ஓட்டலை வாங்கினார். தொடர்ந்து அடுத்தடுத்து ஓட்டல்கள். உலகில் இன்று எல்லாப் பகுதியிலும் ஓபராய் ஓட்டல்கள். கோடீஸ்வரர் என்று சாதனை படைத்தார் ஓபராய்.
