PUBLISHED ON : ஆக 30, 2013

அ நிறம் | அளவு
புரட்சிக் கவிஞர் பாரதிதாசனை ஒரு வெளிநாட்டுக்காரர் சந்தித்து, 'எங்கள் நாட்டில் நிலத்துக் கடியில் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களின் மண்டை ஓடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அதனால் உலகத்தில் நாங்கள் தான் பழங்குடிகள்' என்று பெருமையுடன் கூறினார்.
உடனே புரட்சிக் கவிஞர், 'எங்கள் தமிழகத்தில் மண்டை ஓடுகள் மண்ணோடு, மண்ணாகக் கலந்து உருத் தெரியாமல் போய்விட்டன. எனவே, உங்களை விட எங்கள் தமிழர்கள்தான் மிகமிகப் பழங்குடி மக்கள்' என்றார்.
இதைக் கேட்ட வெளிநாட்டுக்காரர் அசந்து போய் விட்டார்.
