தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/நேரம் தவறாமை!

நேரம் தவறாமை!

நேரம் தவறாமை!


PUBLISHED ON : ஜன 01, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 01, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார் மாவட்டம், சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், 1972ல், எம்.எஸ்சி., கணிதம் படித்தபோது, பேராசிரியராக இருந்தார் கணபதி ஐயர்.

மிகவும் எளிமையானவர்; எட்டு முழ வேட்டியும், முழுக்கை சட்டையும் அணிந்திருப்பார்; செருப்பு அணிய மாட்டார். அவர் வழிகாட்டுதலில், முனைவர் பட்டம் பெற்ற, 100க்கு மேற்பட்டோர் உலகம் முழுக்க பெரிய நிறுவனங்களில் உயர் பொறுப்புகளில் உள்ளனர்.

முதுகலை படிப்பை முடித்து, அதே பல்கலையில் விரிவுரையாளராக சேர்ந்தேன். அதேநேரம் அந்த பேராசிரியர் வழிகாட்டுதலில்,

பிஎச்.டி., முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்பிலும் ஈடுபட்டேன். அதில் சந்தேகங்களை தெளிய தினமும் மாலை, 4:30 மணிக்கு அவரை வீட்டில் சந்திப்பேன்.

ஒருநாள் வழக்கமான நேரத்திற்கு செல்ல முடியவில்லை. அன்று மாலை, 6:00 மணிக்கு சென்றேன். வீட்டுத் திண்ணையில் எனக்காக பொறுமையாக காத்திருந்தார். கோபமின்றி ஆய்வுகள் குறித்த சந்தேகங்களை தெளிவுபடுத்தினார்.

விளக்கங்கள் பெற்று புறப்பட தயாரானபோது, 'உங்களுக்காக, 4:00 மணியிலிருந்தே காத்திருக்கிறேன்...' என்றார்; அது மிகவும் உறுத்தியது. தாமதமாக எங்கும் செல்வதில்லை என அன்றே உறுதி எடுத்தேன்.

இப்போது, என் வயது, 72; கல்லுாரி பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். என், 40 ஆண்டு கால பணியில் நேரம் தவறாமையை கடைபிடித்து, மாணவர்களுக்கும் கற்று கொடுத்துள்ளேன். அந்த உணர்வை ஏற்படுத்தியவர் திருவுருவத்தை பூ துாவி வணங்கி வருகிறேன்.

- கே.வைர மாணிக்கம், கடலுார்.

தொடர்புக்கு: 94436 65940


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us