PUBLISHED ON : ஏப் 09, 2022

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்:
புடலங்காய் - 1
துவரம் பருப்பு - 100 கிராம்
கடலை பருப்பு - 100 கிராம்
காய்ந்த மிளகாய் - 4
மஞ்சள் துாள், சோம்பு, உப்பு, எண்ணெய், தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
துவரம் மற்றும் கடலைப் பருப்புகளை, இரண்டு மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை வடித்து சோம்பு, காய்ந்த மிளகாய், உப்பு போட்டு, கொரகொரப்பாக அரைக்கவும். புடலங்காயை சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு, மஞ்சளில் புரட்டவும்.
அதை அரைத்த பருப்புடன் சேர்த்து, வடையாக தட்டி எண்ணெயில் பொரிக்கவும். சுவை மிக்க, 'புடலங்காய் வடை!' தயார். அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.
- ஆர்.எம்.சாத்தப்பன், மதுரை.
தொடர்புக்கு: 99421 03294
