தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/க்வாக்... க்வாக்...!

க்வாக்... க்வாக்...!

க்வாக்... க்வாக்...!


PUBLISHED ON : ஜன 24, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 24, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அதன் கத்தலைக் கேட்ட ஏணி சாக்கு மூட்டைக்குள் இருந்து வெளியே வந்தது. கிணற்றில் சாய்ந்து நின்றது.

அதன் மேல் ஏறிய க்வாக் கிணற்றுக்கு வெளியே வந்தது.

மீண்டும் அரண்மனை வாயிலில் நின்றது க்வாக்.

''அரசே! நான் கொடுத்த கடனைத் திருப்பித் தாருங்கள். என்னை ஏமாற்ற நினைக் காதீர்கள்,'' என்று குரல் கொடுத்தது.

அதன் குரல் அரண்மனை எங்கும் கேட்டது.

கோபம் கொண்ட அரசன், ''வீரர்களே! க்வாக் கிணற்றுக்குள் இருந்து எப்படி வெளியே வந்தது? பெரிய பானைக்குள் அதைப் போட்டுக் கீழே தீ மூட்டுங்கள். வெந்து சாகட்டும்,'' என்று கட்டளை இட்டான்.

அதன்படியே வீரர்கள் க்வாக்கைப் பிடித்துப் பெரிய பானை ஒன்றிற்குள் போட்டனர். அதை அடுப்பின் மேல் வைத்துக் கீழே தீ மூட்டினர்.

பானைக்குள் இருந்த க்வாக்கைத் தீ சுடத் தொடங்கியது.

''ஐயோ! இந்தப் பானைக்குள் வெந்து சாகப் போகிறேனே,'' என்று புலம்பியது.

சாக்கு மூட்டைக்குள் இருந்த ஆற்றின் நினைவு அதற்கு வந்தது. ''ஆறே! என்னைக் காப்பாற்று!'' என்று அலறியது.

அதன் அலறல் ஆற்றிற்குக் கேட்டது. நண்பனுக்கு ஆபத்து என்று சாக்கு மூட்டையைவிட்டு வெளியே வந்தது.பானையின் மேல் வழிந்த தீயை முழுமையாக அணைத்தது.

பானைக்குள் இருந்து வெளியே வந்த க்வாக், மீண்டும் அரண்மனை வாயிலில் வந்து நின்றது.

''என்னிடம் வாங்கிய கடனைத் திருப்பித் தாருங்கள். என்னை ஏமாற்ற வேண்டாம்!'' என்று உரத்துக் குரல் கொடுத்தது.

இப்போது அதன் குரல் தலைநகரம் எங்கும் கேட்டது.

கோபத்தின் உச்சத்திற்கே சென்றான் அரசன். வீரர்களை அழைத்த அவன், ''உங்களால் என் மானமே போய் விட்டது. இனி உங்களை நம்பிப் பயன் இல்லை. க்வாக்கை இங்கே இழுத்து வாருங்கள். நானே அதற்குத் தண்டனை தருகிறேன்,'' என்று கத்தினான்.

அவர்கள் க்வாக்கை இழுத்து வந்து, அரசனின் முன் நிறுத்தினர்.

அதைக் கோபத்துடன் பார்த்த அவன், ''கொடுத்த கடனை என்னிடமே திருப்பிக் கேட்கிறாயா? உன்னை கொல்லாமல் விட மாட்டேன்,'' என்று அரியணையில் இருந்து கீழே இறங்கினான்.

தன் இரண்டு கைகளாலும் க்வாக்கின் கழுத்தைப் பிடித்து நெருக்கத் தொடங்கி னான். உயிரே போவது போலத் துடித்தது க்வாக்.

தேனீக்களின் நினைவு அதற்கு வந்தது.

''தேனீ நண்பர்களே! என்னைக் காப்பாற்றுங்கள்,'' என்று குரல் கொடுத்தது.

சாக்கு மூட்டைக்குள் இருந்த தேனீக்கள் அதன் குரலைக் கேட்டன. கூட்டமாக வெளியே வந்தன. க்வாக்கின் கழுத்தை அரசன் நெருக்குவதைப் பார்த்தன.

நண்பனைக் காப்பாற்ற நினைத்த அவை பறந்து பறந்து அவனைக் கொட்டத் தொடங்கின. வலி தாங்க முடியாத அரசன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தான்.

தேனீக்களோ அவனை விடாமல் துரத்தின. அவற்றிற்கு அஞ்சிய அவன் எங்கே ஓடினான் என்றே தெரியவில்லை. கொடிய அரசன் ஓடிப்போனதை அறிந்த மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் கூத்தாடினர்.

க்வாக்கை வணங்கிய அமைச்சர், ''இந்த அரசனை யாருக்கும் பிடிக்கவில்லை. அவன் கொடுமைக்கு அஞ்சி நடுங்கிய படியே வாழ்ந்து வந்தோம். அவனை விரட்டிய நீங்களே இந்நாட்டிற்கு அரசனாக வேண்டும்,'' என்று வேண்டினர்.

அங்கே இருந்த வீரர்களும் மக்களும், ''நீங்களே அரசராக வேண்டும்,'' என்று முழக்கம் இட்டனர்.

''நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள். எனக்கு என்ன கவலை? நான் அரசனாக முடி சூடிக் கொள்கிறேன். மக்களுக்கு என்னாலான நல்லதைச் செய்வேன்,'' என்று மகிழ்ச்சியுடன் சொன்னது க்வாக்.

ஒரு நல்ல நாளில் அது அரசனானது. அதற்கு உதவியாக ஏணியும், ஆறும், தேனீக்களும் இருந்தன. அதன் நல்லாட்சி யில் எல்லாரும் மகிழ்ச்சியாக இருந்தனர்.

முற்றும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us