தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மிதந்தபடி படிக்க...

மிதந்தபடி படிக்க...

மிதந்தபடி படிக்க...


PUBLISHED ON : ஆக 14, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 14, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆப்ரிக்காவில் உள்ள நைஜீரியா நாட்டின், லாகோஸ் நகருக்கு வெளியே, நீண்ட உப்பங்கழி உள்ளது. இங்கு, மரத்தால் வீடுகட்டி வசிக்கின்றனர். இதை, மாகோகோ என்பர். வீட்டுக்கு வீடு படகுகள் உண்டு. அதில் தான், மக்கள் பயணம் செய்வர்!

இங்கு, ஆரம்ப பள்ளி, உப்பங்கழியில் தாழ்வாக அமைந்திருந்தது; அடிக்கடி வெள்ளம் புகுந்து, பள்ளி இயங்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதற்கு நிவாரணம் தேடினார், நைஜீரிய கட்டடக்கலை நிபுணர், குன்லே அடெயேமி. மூங்கில் மரங்களால், ஒரு பள்ளியை உருவாக்கினார்! அதன் அடியில், 200 காலி பிளாஸ்டிக் பீப்பாய்களை இணைத்து, படகு போல் மிதக்க விட்டார்!

இதில், 100 பேர் வரை அமர்ந்து படிக்கலாம். வகுப்புகள் நடக்காத நேரங்களில், இதை பொது நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்துகின்றனர்.

- ராஜிராதா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us