தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/சமயோசிதம்!

சமயோசிதம்!

சமயோசிதம்!


PUBLISHED ON : பிப் 19, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 19, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்துார், ஜமீன்தார் உயர்நிலைப் பள்ளியில், 1957ல், எஸ்.எஸ்.எல்.சி., படித்தேன். ஆண்டுக்கு ஒருமுறை ஆய்வு செய்யும் மாவட்டக் கல்வி அதிகாரி, அன்று எங்கள் பள்ளிக்கு வந்திருந்தார்.

எங்கள் வகுப்பாசிரியராக இருந்த தலைமை ஆசிரியர் சுந்தரம் ஐயர், வகுப்புக்கு அழைத்து வந்தார். பாடம் நடத்த சொல்லியும், மாணவர்களிடம் கேள்வி கேட்டும் ஆய்வு நடந்து கொண்டிருந்தது. என்னிடம் ஆங்கில செய்யுளில், மூன்று சொற்களுக்கு பொருள் கேட்டார் அதிகாரி; சரியான பதிலைக் கூறினேன். முகத்தில் திருப்தி தெரிந்தது.

மறுகணம், 'ஆங்கில செய்யுளில் இடம்பெற்றுள்ள கடின சொற்களுக்கு, அர்த்தம் எழுதியுள்ள நோட்டை காட்டு...' என்றார் அதிகாரி. அப்படி ஒரு நோட்டு இருந்தால் தானே காட்ட முடியும். எனினும் பயம், திணறலின்றி, 'அந்த நோட்டை எடுத்து வர மறந்து விட்டேன்...' என ஆங்கிலத்தில் கூறினேன். புன்னகைத்தபடி, 'அதெல்லாம் எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டியது...' என்று கூறி, அடுத்த வகுப்புக்கு சென்றார்.

திருப்தி அடைந்த தலைமையாசிரியர், 'குட்... இப்படி தான், சமயோசிதமாக நடக்கணும்... என்னை காட்டிக் கொடுக்காமல் சமாளித்தாய்...' என்று பாராட்டி சென்றார். அது மகிழ்ச்சி தந்தது. என் வயது, 83; வாழ்வில் பல சந்தர்ப்பங்களில் சமயோசிதமாக செயல்பட்டு இருக்கிறேன். அப்போதெல்லாம் அந்த தலைமையாசிரியரின் பாராட்டு, பெருமிதமாக நினைவில் மலரும்.

- பாமதி நாராயணன், சென்னை.

தொடர்புக்கு: 98408 21335

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us