
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 500 கிராம்
இளந்தேங்காய் துருவல் - 100 கிராம்
ஏலக்காய் - 5
உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
வறுத்த அரிசி மாவுடன், பொடித்த ஏலக்காயை சேர்த்து, உப்பு கலந்த தண்ணீர் தெளித்து, கட்டி இல்லாமல் கிளறவும்.
புட்டுக்குழலின் அடிப்பாகத்தில் தேங்காய் துருவல் போட்டு பின், அரிசிமாவுக் கலவையை நிரப்பவும். மேல் பாகத்திலும் துருவிய தேங்காய் போடவும். இதை, நீராவியில் நன்கு வேக வைக்கவும். சத்துமிக்க, 'அரிசி புட்டு' தயார்.
வாழைப்பழம் அல்லது சர்க்கரையுடன் பரிமாறலாம். அனைவரும் விரும்பி சுவைப்பர்.
- டி.என்.ரங்கநாதன், திருச்சி.

