PUBLISHED ON : டிச 30, 2011

தேவையானவை: அரிசிமாவு-3 கப், கடலை மாவு-ஒரு கப், பெருங்காயத்தூள்-ஒரு சிட்டிகை, மிளகாய்தூள்-ஒரு டீஸ்பூன் (அல்லது) காரத்துக்கேற்ப, உப்பு-ஒரு டீஸ்பூன், தேங்காய்ப்பால்- கரைப்பதற்கு, எண்ணெய்- பொரிக்க தேவையான அளவு.
அரைப்பதற்கு: சின்ன வெங்காயம்-4, பூண்டு-4.
செய்முறை: சின்ன வெங்காயத்தை உரித்து பூண்டுடன் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும். அரிசிமாவு, கடலைமாவு, மிளகாய்த்தூள், பெருங்காயத்துதூள், உப்பு, பூண்டு-வெங்காய விழுது சேர்த்து தேங்காய்ப்பால் ஊற்றி, கரைத்து கொள்ளவும்.
தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும். எண்ணெய் சுட வைத்து, சூடானதும் அச்சு முறுக்கு செய்யும் அச்சை எண்ணெயில் மூழ்க வைத்து எடுத்து, மாவுக்குள் விட வேண்டும். முறுக்கு அச்சுமாவில் தோய்த்து மாவு ஒட்டிகொண்டவுடன் எண்ணெயில் அச்சினை விட வேண்டும். அப்படி விட்டால், எண்ணெய்க்குள் முறுக்கு தனியாக பிரிந்து விடும். வெந்ததும் எடுத்தால், ரோஸ் முறுக்கு ரெடி.
***
