தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/தியாகச் செம்மல்!

தியாகச் செம்மல்!

தியாகச் செம்மல்!


PUBLISHED ON : ஏப் 20, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 20, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சுதந்திரத்துக்காக போராடி, கடும் துன்பம் அனுபவித்த போராளிகளில் ஒருவர், நீலகண்ட பிரம்மச்சாரி. தஞ்சை மாவட்டம், சீர்காழி அருகே, எருக்கஞ்சேரி கிராமத்தில் பிறந்தவர். ஐரோப்பியரான நெல்லை கலெக்டர் ஆஷ் கொலை வழக்கில், முதல் குற்றவாளியாக, போலீசார் இவரை சேர்த்த போதுதான், பிரபலமானார்.

இந்திய விடுதலை போராட்டத்தில் இளம் வயதில், 20 ஆயிரம் போராளிகளை திரட்டி, 'பாரத மாதா சங்கம்' என்ற புரட்சி இயக்கத்தை தோற்றுவித்தார். போராட்டமே வாழ்க்கை ஆனதால், இந்தியா, பாகிஸ்தான், மியான்மர் சிறைகளில், வாழ்வின் பெரும்பகுதியைக் கழித்தார்.

அப்போதைய நெல்லை கலெக்டர் ஆஷை சுட்டுக் கொன்ற வழக்கில் கைதான, 14 பேரில், முதல் குற்றவாளி நீலகண்ட பிரம்மச்சாரி. ஏழரை ஆண்டு தண்டனை பெற்று சிறை சென்ற போது அவருக்கு, 21 வயது.

சிறைவாசம் முடிந்து திரும்பியதும், விடுதலை பற்றி ஓயாமல் பிரசாரம் செய்தார். அதற்கு கிடைத்ததோ, பசியும், பட்டினியும் தான். பசி தாங்க முடியாமல், இரவு நேரத்தில் முகத்தை மறைத்தபடி, 'ராப்பிச்சை' எடுக்க ஆரம்பித்தார். அந்த நிலை ஏற்பட்டது குறித்து, வருந்தி, அதை நிறுத்தினார். விளைவு, பல நாட்கள் பட்டினி.

பசி பொறுக்க முடியாமல், திருவல்லிக்கேணியில், பாரதியாரை பார்க்க சென்றார். வாடிப்போயிருந்த நீலகண்டரை, பாரதிக்கு அடையாளம் தெரியவில்லை.

'பாரதி... நான் தான் நீலகண்ட பிரம்மச்சாரி...' என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.

'டேய், நீலகண்டா, இது என்ன கோலம்...' என்று, கட்டி அணைத்து கண்ணீர் விட்டார் பாரதி.

'பாரதி... எனக்கு ஒரு நாலணா கொடேன்; சாப்பிட்டு நான்கு நாளாச்சு...' என்றார். அவருக்கு உணவு ஏற்பாடு செய்து கொடுத்தபோது தான் பாரதியின் உள்ளத்தில், 'தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்ற உணர்ச்சிகரமான பாடல் வரி பொங்கியது.

பாரதி இறக்கும் தருவாயில், இவரைத்தான் கொள்ளி போட சொன்னார். மறுத்ததால், ஹரிஹர சர்மா என்பவர் கொள்ளி போட்டார்.

ஆங்கிலேயருக்கு எதிராக, தொடர்ந்து போராடிய நீலகண்ட பிரம்மச்சாரி, 1922ல் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். எட்டு ஆண்டுகளுக்குப் பின், 1930ல் விடுதலை செய்யப்பட்டார்.

சிறை வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டு, 1931ல் துறவறம் பூண்டார். மைசூர், நந்தி கிராமம் அருகே, சென்னகிரியில், 'ஓம்கார்' என்ற பெயரில், 1933ல் ஆசிரமம் அமைத்தார். காந்திஜி, 1936ல் மைசூர் வந்த போது, இவர் தங்கியிருந்த மலைக்கே சென்று சந்தித்து பேசினார். உடல்நல குறைவால், 88வது வயதில், 1978 ல் காலமானார்.

இவர் போன்ற தியாகிகளால் பிறந்தது தான் இந்திய தேசம். இதை போற்றி பாதுகாக்க வேண்டும்; வளர்ச்சிப் பாதையில் அழைத்து செல்ல வேண்டும் குட்டீஸ்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us