PUBLISHED ON : டிச 07, 2012
பட்டூஸ் இந்த உலகில் நாம் கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. அதனால்தான், கற்றது கை மண் அளவு, கல்லாதது உலகளவு என்று சொல்வர். இப்படி புதிதாக, தான் இறப்பதற்குள் ஒரு விஷயத்தை கற்று கொள்ள வேண்டுமென்று ஆசைப்பட்ட ஒருவரை பற்றி தெரியுமா?
அவர்தான் கிரேக்க அறிஞர் சாக்ரடீஸ். அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, பக்கத்து அறையில் இருந்த கைதி ஒருவன் ஒரு இசை கருவியை வாசித்து கொண்டிருந்தான். அந்த இசையை கேட்ட சாக்ரடீஸ், உடனே அந்த கைதியை பார்த்து, அந்த இசையை தனக்கு கற்று தருமாறு கேட்டார். அதற்கு அந்த கைதி, மரணதண்டனை பெற்று சீக்கிரம் சாகப்போகும் நீங்கள், இதை கற்று கொள்வதால் என்ன பயன் பெறப் போகிறீர் என்று கேட்டான்.
அதற்கு சாக்ரடீஸ், 'நான் இறப்பதற்குள் புதிதாக ஒன்றை தெரிந்து கொண்டேனே என்ற திருப்திதான்!' என்றார்!
குட்டீஸ்... அப்போ நீங்களும், நானும் எவ்ளோ தினமும் கற்றுக்கணும்!
