தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/விஞ்ஞானி! (11)

விஞ்ஞானி! (11)

விஞ்ஞானி! (11)


PUBLISHED ON : ஜூன் 20, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 20, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரசாயனத் துறை மாணவர்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகமான பெயர் கெகுல் வான் ஸ்டிராடோனிட்ஸ் என்ற விஞ்ஞானியின் பெயர். அவருடைய உண்மையான பெயர் பிரைட்ரிச் ஆகஸ்ட் கெகுல் என்பது. வான் ஸ்டிராடோனிட்ஸ் என்பதைப் பிற்காலத்தில் தான் அவர் பெயரோடு சேர்த்துக் கொண்டார்.

ரசாயனத் துறையில் பல அரிய உண்மைகளைக் கண்டுபிடித்து அறிவித்தவர் கெகுல்.

குறிப்பாக, தனிமங்களில் அணுக்கள் எவ்வாறு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன என்பதை ஆராய்ந்து சொன்னவர் அவர்தான். கார்பன் அணுக்கள் என்பதை, திறப்புச் சங்கிலி முறை, மூடிய சங்கிலி முறை, மோதிர வளையச் சங்கிலி முறை ஆகிய மூன்று முறைகளில் ஒன்றோடொன்று இணையக் கூடியவை என்பதைக் கண்டு பிடித்துச் சொன்னதன் மூலம் இன்று லட்சத்திற்கும் மேற்பட்ட கார்பன் சேர்மங்களை உருவாக்க வழி வகுத்த விஞ்ஞான மேதை கெகுல் ஆவார்.

தொழில் துறையில் பரவலாக உபயோகிக்கப் பட்டு வரும் கார்பன் சேர்மம் பென்ஸீன் ஆகும். அந்த பென்ஸீன் சேர்மத்தின் அமைப்பைப் பற்றி கெகுல் 1865ம் ஆண்டில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த போது, பென்ஸீன் தனிமக் கூறுகளின் அமைப்பு பற்றிய கணக்குக்கு விடை அவருக்குச் சரியாகத் தெரியாமல் மிகவும் குழப்ப மடையச் செய்து வந்தது.

ஆனால், திடீரென ஒருநாள் இரவு அவரது கனவில் அந்தக் குறிப்பிட்ட விடை தோன்றியது. ஒரு பாம்பு மோதிர வளையம் போல் சுருண்டு தலையில் (வாயில்) வால் சொருகிய தோற்றம் அவர் கனவில் தோன்றியதாம். பென்ஸீனின் அணு மூலக்கூறுகளும் இதே வடிவில்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடனே தோன்றியதாம். அவரது ஆறு கார்பன் பென்ஸீன் வளையத் தத்துவம் இந்தக் கனவுப் பாம்புக் காட்சியின் மூலம்தான் உருவானதாம்.

இன்னொரு நாள் பகற் பொழுதில் கெகுல் ஒரு கணப்பு அடுப்புக்கு முன்னால் உள்ள இருக்கை யில் சாய்ந்தவாறே கண்ணயர்ந்திருக்க, அவரது கனவில் எதிரே எரிந்து கொண்டிருந்த தணலில் ஆறு கார்பன் அணுக்கள் நடனமாடிக் கொண்டே யிருந்தனவாம்! திடீரென்று அந்த ஆறு கார்பன் அணுக் களும் ஒரு மோதிர வளைய உருவில் இணைந்து கொண்டனவாம்.

இந்த இரண்டு கனவுக் காட்சிகளையும் இணைத்துத் தான் கெகுல் பல சோதனை களை நடத்தி பென்ஸீன் கார்பன் தனிம அமைப்பை உறுதி செய்தார்.

ஆச்சரியமா இல்ல பட்டூஸ்!

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us