PUBLISHED ON : ஜூலை 23, 2010

ஆப்கானிய வீரர்கள் மின்னல் வேகத்தில் நடந்துவிட்ட அதிசய நிகழ்ச்சியைக் கண்டு திகைத்தனர். லைலாவின் தலையில்லா முண்டம் மட்டும் இரண்டொரு கணம் வாளைச் சுழற்றியது கண்டு சில ஆப்கானிய வீரர்கள் அச்சத்தையும் மறந்து சிரித்துவிட்டனர். பின் சிரிப்பை அடக்கிக் கொண்டு ஓடத் தலைப்பட்டனர்.
லைலாவின் தலை தரையில் விழுந்ததைக் கண்டதும் தாரா, ''பழிக்குப் பழி! என் சூளுரை நிறைவேறிவிட்டது!'' என்று வாளை உயர்த்தி உரக்கக் கூறிவிட்டுக் குதிரையைக் காலால் அடிவயிற்றில் மோதினாள். குதிரை குறிப்பறிந்து நகருக்கு வெளியே பறந்தது. பிருதிவிராஜனும் தாராவும் நகருக்கு வெளியே இருந்த படைகளுடன் வீராவேசத்தோடு நகருள் நுழைந்தனர். ஆப்கானிய வீரர்கள் தலைவனை இழந்ததால் செயலற்று நின்றனர். அந்த நேரத்தில் கடல் அலைபோல் சூரசேனனின் படை வீரர்கள் ஆப்கானிய வீரர்கள் மீது பாய்ந்து தாக்கினர்; ஆப்கானிய வீரர்களும் எதிர்த் தாக்குதல் நடத்தினர். டோங்குப் பகுதி மக்கள் லைலாவைக் கொன்றது தங்கள் பழைய மன்னர் மகள் தாரா என்பதையும், இழந்த நாட்டை மீட்கவே சூரசேனன் படைகளும் பிருதிவிராஜனும் வந்திருக்கின்றனர் என்பதையும் அறிந்தனர். அவர்களிடம் குடி கொண்டிருந்த அடிமைத்தன்மை ஒழிந்து வீர உணர்வு தலைதூக்கவே அவர்களும் ஆப்கானிய வீரர்களைக் கையில் கிடைத்த ஆயுதங்களைக் கொண்டு கொன்று குவித்தனர்.
இதனால் பிருதிவிராஜன் எளிதில் வெற்றி பெற்றான். டோங்குப் பகுதியைப் கைப்பற்றி விட்டான். சூரசேனன் டோங்கு பகுதிக்கு மீண்டும் மன்னனானான். தாரா தன் தந்தையை அரியணையில் அமர்த்திப் பார்த்துவிட்டு, ''அப்பா! உங்கள் மகள் தன் சூளுரையை நிறைவேற்றி விட்டாள்; கடமையைச் செய்து விட்டாள்!'' என்று பூரிப்புப் பொங்கக் கூறினாள்.
சூரசேனன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ''மகளே! உன்னைப் பெண்ணாகவா வளர்த்தேன்! இந்த நாட்டு மன்னனாக அல்லவா வளர்த்தேன்; தாரா என்ற பெயரைக் கேட்டாலே ஆப்கானியர் ஐங்காதம் அஞ்சி ஓடுவர். என் மருமகன் பிருதிவிராஜனும், நீயும் இல்லாவிட்டால் இந்த அரியணையில் அமர்ந்திருக்க முடியுமா? வீழ்ந்துவிட்ட வீரத்தை எடுத்து நிலைநிறுத்திய பெருமை உங்கள் இருவரையும் சாரும். நீங்கள் நீடுழி வாழ இறைவன் அருள் புரிவானாக!'' என்று நெஞ்சம் குழைய வாழ்த்தினான். தாராவுக்கு ஒரு தம்பி இருந்தான். அவன் தாராவுக்கு எதிர்மாறான குணங்கள் கொண்டவன். கொடிய உள்ளம் கொண்டவன். பொறாமை அவன் தோழன். தீயவர்கள் அவன் உற்ற நண்பர்கள். தந்தை எப்போது சாவார். அரியணையேறலாம் என்று அவர் சாவை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவன்.
நாடு சிறியதாக இருந்தபோதே இப்படிக் கனவு கண்டிருந்தவன் நாடு பெரிதாக விரிவடைந்ததும் அவன் நாடாளத் துடித்தான். தந்தை தாராவை பாராட்டியது எரியும் தீயில் எண்ணெய் வார்த்ததுபோல் ஆயிற்று. பிருதிவி ஒருக்கால் நம் நாட்டுக்கு மன்னனாக ஆகிவிடுவானோ என்று அஞ்சினான். அவனை எதிர்க்கும் ஆற்றலோ, வீரமோ இவனிடமில்லை. அதை நினைத்துப் புழுங்கினான்.
அவன் ஒருநாள் மைத்துனன் பிருதிவிராஜனை விருந்துக்கு அழைத்தான். விருந்தில் பலவிதமான பண்டங்கள் பரிமாறப்பட்டிருந்தன. இவன் பிருதிவிராஜனின் பக்கத்தில் அமர்ந்து கொண்டு ஒவ்வொரு பதார்த்தத்தின் பெயரையும்,, சுவையையும் சொல்லிக் கொண்டிருந்தான். இவனும் விருந்தருந்தினான். பிருதிவிராஜன் மைத்துனன் அளித்த விருந்துணவை வயிறு புடைக்க உண்டு விட்டு ஓய்வுக்காகக் கட்டிலில் சாய்ந்தான்.
சாய்ந்தவன் சாய்ந்தவன்தான்; பின் நிமிரவே இல்லை. பிருதிவிராஜன் உண்ட களைப்பால் உறங்குகிறான் என்று நினைத்து அவனை எவரும் எழுப்பவில்லை. நீண்ட நேரம் பிருதிவிராஜன் எழாதிருப்பதைக் கண்ட தாரா, அவனை எழுப்பினாள்; எழவில்லை. ''தூங்குவதைப் போல் பாசாங்கா செய்கிறீர்கள்,'' என்று கூறிக் கொண்டே அவனைத் தொட்டு அசைத்து எழுப்பினாள். அப்போதும் அவன் எழவில்லை. உடல் சில்லிட்டிருந்தது!
தாரா துடிதுடித்து மூக்கிலும் மார்பிலும் கை வைத்துப் பார்த்தாள்; மூச்சும் இல்லை; இருதயத் துடிப்பும் இல்லை. ''ஐயோ என்னை மோசம் செய்து விட்டீர்களே! நான் மோசம் போய் விட்டேனே!'' என்று பிருதிவிராஜன் உடல் மீது விழுந்து கதறினாள்.
''அக்கா! அத்தானுக்கு என்ன நேர்ந்துவிட்டது. ஏன் இப்படி கதறுகிறாய்?'' என்று கேட்டுக் கொண்டே ஓடி வந்தான். நிலைமையை அப்போதுதான் அறிந்து கொண்டவன் போல் கதறிப் பாசாங்கு செய்து நீலிக்கண்ணீர் வடித்தான். இவன்தான் விருந்துணவில் நஞ்சைக் கலந்து பிருதிவிராஜனைக் கொன்றவன் என்று தாராவுக்கு எப்படித் தெரியும்? தம்பி இத்தகைய கொடிய செயல் செய்வான் என்று அவளால் நினைக்க முடியவில்லை. தம்பியின் கதறலும், கண்ணீரும் இவன் மீது ஐயம் கொள்ளாமல் செய்துவிட்டது. தாரா கணவனைப் பிரிந்து வாழ விரும்பவில்லை. பிருதிவிராஜன் சிதையில் தனக்கொரு இடம்பெற்று உடன்கட்டை ஏறினாள். சுற்றி வளைத்துக் கொழுந்துவிட்டு எரியும் தீயின் நாக்கு வஞ்சகத்தால் மாண்ட பிருதிவிராஜனையும், கணவனுக்காக உயிர்விடத் துணிந்த தாராவையும் சுட்டெரித்தது! உயிரற்ற உடல் ஒன்றும், உயிருள்ள உடல் ஒன்றும் ஈமத்தீயில் எரிந்து சாம்பலாகியது.(- முற்றும்) தொடர்கதை - தாரா ஆற்றிய அருஞ்செயல் - பகுதி -(6)
ஆப்கானிய வீரர்கள் மின்னல் வேகத்தில் நடந்துவிட்ட அதிசய நிகழ்ச்சியைக் கண்டு திகைத்தனர். லைலாவின் தலையில்லா முண்டம் மட்டும் இரண்டொரு கணம் வாளைச் சுழற்றியது கண்டு சில ஆப்கானிய வீரர்கள் அச்சத்தையும் மறந்து சிரித்துவிட்டனர். பின் சிரிப்பை அடக்கிக் கொண்டு ஓடத் தலைப்பட்டனர்.
லைலாவின் தலை தரையில் விழுந்ததைக் கண்டதும் தாரா, ''பழிக்குப் பழி! என் சூளுரை நிறைவேறிவிட்டது!'' என்று வாளை உயர்த்தி உரக்கக் கூறிவிட்டுக் குதிரையைக் காலால் அடிவயிற்றில் மோதினாள். குதிரை குறிப்பறிந்து நகருக்கு வெளியே பறந்தது. பிருதிவிராஜனும் தாராவும் நகருக்கு வெளியே இருந்த படைகளுடன் வீராவேசத்தோடு நகருள் நுழைந்தனர். ஆப்கானிய வீரர்கள் தலைவனை இழந்ததால் செயலற்று நின்றனர். அந்த நேரத்தில் கடல் அலைபோல் சூரசேனனின் படை வீரர்கள் ஆப்கானிய வீரர்கள் மீது பாய்ந்து தாக்கினர்; ஆப்கானிய வீரர்களும் எதிர்த் தாக்குதல் நடத்தினர். டோங்குப் பகுதி மக்கள் லைலாவைக் கொன்றது தங்கள் பழைய மன்னர் மகள் தாரா என்பதையும், இழந்த நாட்டை மீட்கவே சூரசேனன் படைகளும் பிருதிவிராஜனும் வந்திருக்கின்றனர் என்பதையும் அறிந்தனர். அவர்களிடம் குடி கொண்டிருந்த அடிமைத்தன்மை ஒழிந்து வீர உணர்வு தலைதூக்கவே அவர்களும் ஆப்கானிய வீரர்களைக் கையில் கிடைத்த ஆயுதங்களைக் கொண்டு கொன்று குவித்தனர்.
இதனால் பிருதிவிராஜன் எளிதில் வெற்றி பெற்றான். டோங்குப் பகுதியைப் கைப்பற்றி விட்டான். சூரசேனன் டோங்கு பகுதிக்கு மீண்டும் மன்னனானான். தாரா தன் தந்தையை அரியணையில் அமர்த்திப் பார்த்துவிட்டு, ''அப்பா! உங்கள் மகள் தன் சூளுரையை நிறைவேற்றி விட்டாள்; கடமையைச் செய்து விட்டாள்!'' என்று பூரிப்புப் பொங்கக் கூறினாள்.
சூரசேனன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ''மகளே! உன்னைப் பெண்ணாகவா வளர்த்தேன்! இந்த நாட்டு மன்னனாக அல்லவா வளர்த்தேன்; தாரா என்ற பெயரைக் கேட்டாலே ஆப்கானியர் ஐங்காதம் அஞ்சி ஓடுவர். என் மருமகன் பிருதிவிராஜனும், நீயும் இல்லாவிட்டால் இந்த அரியணையில் அமர்ந்திருக்க முடியுமா? வீழ்ந்துவிட்ட வீரத்தை எடுத்து நிலைநிறுத்திய பெருமை உங்கள் இருவரையும் சாரும். நீங்கள் நீடுழி வாழ இறைவன் அருள் புரிவானாக!'' என்று நெஞ்சம் குழைய வாழ்த்தினான். தாராவுக்கு ஒரு தம்பி இருந்தான். அவன் தாராவுக்கு எதிர்மாறான குணங்கள் கொண்டவன். கொடிய உள்ளம் கொண்டவன். பொறாமை அவன் தோழன். தீயவர்கள் அவன் உற்ற நண்பர்கள். தந்தை எப்போது சாவார். அரியணையேறலாம் என்று அவர் சாவை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவன்.
நாடு சிறியதாக இருந்தபோதே இப்படிக் கனவு கண்டிருந்தவன் நாடு பெரிதாக விரிவடைந்ததும் அவன் நாடாளத் துடித்தான். தந்தை தாராவை பாராட்டியது எரியும் தீயில் எண்ணெய் வார்த்ததுபோல் ஆயிற்று. பிருதிவி ஒருக்கால் நம் நாட்டுக்கு மன்னனாக ஆகிவிடுவானோ என்று அஞ்சினான். அவனை எதிர்க்கும் ஆற்றலோ, வீரமோ இவனிடமில்லை. அதை நினைத்துப் புழுங்கினான்.
அவன் ஒருநாள் மைத்துனன் பிருதிவிராஜனை விருந்துக்கு அழைத்தான். விருந்தில் பலவிதமான பண்டங்கள் பரிமாறப்பட்டிருந்தன. இவன் பிருதிவிராஜனின் பக்கத்தில் அமர்ந்து கொண்டு ஒவ்வொரு பதார்த்தத்தின் பெயரையும்,, சுவையையும் சொல்லிக் கொண்டிருந்தான். இவனும் விருந்தருந்தினான். பிருதிவிராஜன் மைத்துனன் அளித்த விருந்துணவை வயிறு புடைக்க உண்டு விட்டு ஓய்வுக்காகக் கட்டிலில் சாய்ந்தான்.
சாய்ந்தவன் சாய்ந்தவன்தான்; பின் நிமிரவே இல்லை. பிருதிவிராஜன் உண்ட களைப்பால் உறங்குகிறான் என்று நினைத்து அவனை எவரும் எழுப்பவில்லை. நீண்ட நேரம் பிருதிவிராஜன் எழாதிருப்பதைக் கண்ட தாரா, அவனை எழுப்பினாள்; எழவில்லை. ''தூங்குவதைப் போல் பாசாங்கா செய்கிறீர்கள்,'' என்று கூறிக் கொண்டே அவனைத் தொட்டு அசைத்து எழுப்பினாள். அப்போதும் அவன் எழவில்லை. உடல் சில்லிட்டிருந்தது!
தாரா துடிதுடித்து மூக்கிலும் மார்பிலும் கை வைத்துப் பார்த்தாள்; மூச்சும் இல்லை; இருதயத் துடிப்பும் இல்லை. ''ஐயோ என்னை மோசம் செய்து விட்டீர்களே! நான் மோசம் போய் விட்டேனே!'' என்று பிருதிவிராஜன் உடல் மீது விழுந்து கதறினாள்.
''அக்கா! அத்தானுக்கு என்ன நேர்ந்துவிட்டது. ஏன் இப்படி கதறுகிறாய்?'' என்று கேட்டுக் கொண்டே ஓடி வந்தான். நிலைமையை அப்போதுதான் அறிந்து கொண்டவன் போல் கதறிப் பாசாங்கு செய்து நீலிக்கண்ணீர் வடித்தான். இவன்தான் விருந்துணவில் நஞ்சைக் கலந்து பிருதிவிராஜனைக் கொன்றவன் என்று தாராவுக்கு எப்படித் தெரியும்? தம்பி இத்தகைய கொடிய செயல் செய்வான் என்று அவளால் நினைக்க முடியவில்லை. தம்பியின் கதறலும், கண்ணீரும் இவன் மீது ஐயம் கொள்ளாமல் செய்துவிட்டது. தாரா கணவனைப் பிரிந்து வாழ விரும்பவில்லை. பிருதிவிராஜன் சிதையில் தனக்கொரு இடம்பெற்று உடன்கட்டை ஏறினாள். சுற்றி வளைத்துக் கொழுந்துவிட்டு எரியும் தீயின் நாக்கு வஞ்சகத்தால் மாண்ட பிருதிவிராஜனையும், கணவனுக்காக உயிர்விடத் துணிந்த தாராவையும் சுட்டெரித்தது! உயிரற்ற உடல் ஒன்றும், உயிருள்ள உடல் ஒன்றும் ஈமத்தீயில் எரிந்து சாம்பலாகியது.(- முற்றும்)
