தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/சேவை தவறல்ல...

சேவை தவறல்ல...

சேவை தவறல்ல...


PUBLISHED ON : ஜன 18, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 18, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை, சபர்பன் மேல்நிலைப் பள்ளியில், 1987ல், 9ம் வகுப்பு படித்தபோது, வகுப்பாசிரியராக இருந்தவர் தங்கம்.

அடிக்கடி மதிய உணவு வாங்கி வர சொல்வார்; வீட்டில் சிறிய வேலைகளையும் செய்ய சொல்வார். அது எனக்கு பிடிக்கவில்லை.

சலிப்படைந்து என் தந்தையிடம் கூறியபோது, 'ஆசிரியருக்கு உரிய பணிவிடைகளை செய்வது உன் கடமை. முற்காலத்தில் நாட்டின் இளவரசர்களே, குருவின் ஆடைகளை துவைத்து, சேவை செய்து, கலைகள் பயின்றதாக வரலாறே உள்ளதே...' என்றார்.

பின், எவ்வித சலிப்பும் இன்றி, ஆசிரியருக்கு உதவ துவங்கினேன். அவர் குடும்பத்தில் ஒருவன் ஆனேன்.

பாடத்தில் வரும் சந்தேகங்களை, அவ்வப்போது கேட்டு தீர்க்க முடிந்தது. இதன்மூலம், தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்றேன். கல்லுாரியில் சேர்வதற்கும் நல் வழிகாட்டினார். என் பள்ளி, கல்லுாரி நாட்கள் சிறப்பாக அமைந்தன.

இப்போது, என் வயது, 45; வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும், அந்த ஆசிரியரை நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன்.

- சித.பழனியப்பன், மதுரை.

தொடர்புக்கு: 99426 13131


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us