PUBLISHED ON : ஜூன் 17, 2011

அ நிறம் | அளவு
தெருவில் மிக ஆக்ரோசமாக ஓடி வந்த மாட்டைப் பார்த்த ஒரு சிறுவன். முதலில் பயந்தாலும் கழுத்தில் கயிறு தொங்குவதைப் பார்த்ததும் தைரியம் கொண்டு மாட்டின் கழுத்திலுள்ள கயிற்றை எடுத்து அருகிலுள்ள மரத்தில் மூன்று நான்கு முறை சுற்றினான். உடனே மாட்டின் உரிமையாளரை தேடி சென்றான். காரணம், மாடு தப்பி செல்ல முடியாது என்பதை அவன் அறிவான். ஏன் மாடு தப்பி செல்லவில்லை?
இங்கே உராய்வு விசை வேலை செய்கிறது. அதாவது மரத்திற்கும், கயிறுக்கும் இடையே உராய்வு விசை ஏற்படுகிறது. இந்த உராய்வு விசையின் வேகம், மரத்தில் சுற்றப்பட்டுள்ளன. கயிற்றின் ஒவ்வொரு சுற்றுக்கும் ஏற்ப அதிகரிக்கும். எனவே, கயிறு கழன்று வராது இதே போல் ஒரு யானையை கூட கட்டிப் போடலாம்... அந்த யானையால் தப்பிச் செல்ல முடியாது.
