PUBLISHED ON : பிப் 10, 2012

அ நிறம் | அளவு
காலி டப்பாவை சற்று உயரத்திலிருந்து கீழே போட்டால் சப்தம் அதிகமாக வரும். ஆனால், அதே டப்பாவில் தண்ணீர் நிரப்பி, அதே உயரத்திலிருந்து போட்டால் சப்தம் குறைவாக வரும் இதற்கு காரணம் என்ன?
காலிடப்பா கீழே விழும் போது டப்பாவின் உட்பகுதியில் காற்று நிரம்பியிருக்கும். ஒலி அதிர்வுகள் காற்றில் வேகமாக செல்வதால் சப்தம் அதிகமாக கேட்கிறது. ஆனால், ஏதாவது திரவம் நிரம்பிய டப்பாவை மேலிருந்து கீழே போடும்போது சப்தம் குறைவாக இருக்கும். காரணம், ஒலி அதிர்வுகளை இந்த திரவம் தடுத்து விடுகிறது. அதுமட்டுமல்லாமல் டப்பாவில் குறைந்தளவு காற்று மட்டுமே இருப்பதால் சப்தம் குறைவாக வெளிவருகிறது.
