PUBLISHED ON : அக் 24, 2026
அ நிறம் | அளவு
பலவித பாக்டீரியாக்களும், வைரஸ்களும் உடலில் நோய் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. நோய் தொற்றுவதில் இருந்து உடலை பாதுகாக்கிறது தடுப்பூசி மருந்து. பாக்டீரியா மற்றும் வைரசை பலவீனப்படுத்தி, தடுப்பூசியாக மாற்றி, உடலில் ஊசி வழியாக செலுத்துவர் மருத்துவர்கள்.
உதாரணத்திற்கு, தட்டம்மை உருவாக்கும் வைரஸ், பலவீனப்படுத்தப்பட்டு அந்த நோயை தடுக்கும் தடுப்பூசி மருந்தாகிறது. சிறிதளவு பலவீனப்படுத்தப்பட்ட அந்த வைரஸ் அந்த மருந்தில் இருக்கும். இதை ஊசி மூலம் செலுத்தும் போது, எதிர்ப்பு சக்தி, 'ஆன்டிபாடி' எதிர்ப்பு புரதங்கள் உடலில் உருவாகிறது. அடுத்த முறை, தட்டம்மை நோய் தொற்ற நேர்ந்தால், இந்த குறிப்பிட்ட எதிர்ப்பு புரதங்கள், வைரைசை எதிர்த்து போராடும். இதனால் நோய் தொற்றிலிருந்து தப்ப முடியும்.
