sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஹிஸ்பிட் முயல்!

ஹிஸ்பிட் முயல்!

ஹிஸ்பிட் முயல்!


PUBLISHED ON : அக் 25, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 25, 2025


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதி புல்வெளிகளில் வாழும் அரிய வகை உயிரினம் ஹிஸ்பிட் முயல். இது, அசாம் காட்டுமுயல் என்றும் அழைக்கப்படுகிறது. தனித்துவமான தோற்றத்துடன் காணப்படும். மெதுவாக ஓடும்; ஆனால் எளிதாக மறைந்து கொள்ளும். கரடுமுரடான ரோமங்கள், இயற்கையாக மறைந்து கொள்ள உதவும்.

உடல் மஞ்சள்-, பழுப்பு கலந்த நிறத்தில் இருக்கும். நீண்ட காதுகள், குறுகிய வால், பெரிய பற்கள், இதன் அடையாளம். இது, 50 செ.மீ., வரை வளரும். வளர்ந்த முயலின் எடை 2.5 கிலோ வரை இருக்கும். உயரமான புல்வெளி, சதுப்பு நிலம், ஆற்றங்கரைகளில் வாழும்.

அசாம், மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் மாநிலங்களில் காணப்படுகிறது. ஒரு காலத்தில் நேபாளம், வங்கதேசம், பூடான் வரை பரவியிருந்தது. இப்போது அழிவின் விளிம்பில் உள்ளது. உலக அளவில் மிக அரிதான முயல் இனங்களில் ஒன்றாக வகைபடுத்தப்பட்டு உள்ளது.

இரவு நேரத்தில் சுறுசுறுப்பாக இயங்கும். புல், இலை, தளைகளை உணவாக உட்கொள்ளும். தனித்து புல்வெளிகளில் மறைந்து வாழும் பண்புள்ளது. ஆண்டுக்கு மூன்று குட்டிகள் வரை ஈனும். வேட்டை, வாழிட இழப்பு, விவசாய நில விரிவாக்கத்தால் அச்சுறுத்தலுக்கு உள்ளகியுள்ளது.

இந்த விலங்கினத்தை பாதுகாக்க சிறப்பு பூங்காக்களில் முயற்சி மேற்கொள்ளப் படுகிறது.

- விஜயன் செல்வராஜ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us