sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

ஓடி ஒளியாதே பூஞ்சிட்டே! (16)

/

ஓடி ஒளியாதே பூஞ்சிட்டே! (16)

ஓடி ஒளியாதே பூஞ்சிட்டே! (16)

ஓடி ஒளியாதே பூஞ்சிட்டே! (16)


PUBLISHED ON : நவ 16, 2024

Google News

PUBLISHED ON : நவ 16, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முன்கதை: வளர்ப்பு மிருகங்கள் மீது அன்பு கொண்ட சிறுவன் மகிழ் ஆர்வத்தை அறிந்து, காவல்துறையில் ஓய்வு பெற்ற மோப்பநாய் செங்கிஸ்கானை தத்தெடுத்தார் அவன் தந்தை. எதிர்ப்பை மீறி அடுக்குமாடி குடியிருப்பில் வளர்த்தனர். குடியிருப்பின் எல்லா பகுதிகளிலும் பாதுகாப்பை உறுதி செய்தது செங்கிஸ்கான். காவல்துறையில் அதன் பயிற்சியாளராக இருந்த காண்டீபன் பிரிய முடியாமல் மகிழ் வீட்டிலிருந்து, அதை கடத்தி சென்றான். இனி -

இரையை விழுங்கி, நெளிந்து கொண்டிருக்கும் மலைப்பாம்பு போல வளைந்திருந்தது மூணாறு சாலை.

புரோட்டா உணவு போல் சுருண்டு உயர்ந்திருந்தன கொண்டை ஊசி வளைவுகள்.

மேகமூட்டம், 22 டிகிரி சென்டிகிரேட் சீதோஷ்ண நிலை நிலவியது.

எங்கு பார்த்தாலும், வகிடு எடுக்கப்பட்ட பச்சைக் கம்பளங்களாய் தேயிலை தோட்டங்கள்.

கடல் மட்டத்தில் இருந்து, 5,200 அடி உயரத்தில், வேன் ஓடியது.

வேனை செலுத்திய காண்டீபன் முகத்தில், வெற்றி புன்னகை தவழ்ந்தது.

வேனில் தன் முதுகுக்கு பின், செங்கிஸ்கானை கட்டி வைத்திருக்கும் மூட்டையை பார்த்தான். அது, அசைந்து புரண்டது.

மூட்டையை கிழித்து வெளியேற முயற்சித்தது செங்கிஸ்கான்.

மூணாறின் நகரப் பகுதியை விட்டு காட்டுக்குள் திரும்பியது வேன்.

ஒற்றையடி பாதை குண்டும், குழியுடன், சேறும், சகதியாய் இருந்தது.

குதித்து தாவியது வேன்.

ஒரு ஓட்டு வீடு அருகில் நின்றது; வீட்டு வாசலில் நின்றிருந்தார் காண்டீபனின் மனைவி.

வேனில் இருந்து குதித்தான் காண்டீபன்.

''வந்துட்டீங்களா...''

தலையாட்டினான்.

''எனக்கு பயமாக இருக்கு. ஆறு மாதம், 'மெடிக்கல் லீவ்' போட்டு வந்திருக்கிறீர்; நீங்கள் மயக்கப்படுத்திய மகிழின் குடும்பம், எழுந்து இருக்கும். தற்சமயம், காவல்துறையில் புகார் செய்து இருப்பர்; உங்களையும், செங்கிஸ்கானையும் காவல் துறையினர் தீவிரமாக வலை வீசி தேடுவர்...''

''அப்படி எதுவும் நடக்காது...''

''நீங்கள் கொடுத்த மயக்க மருந்து, அதிகமாக வேலை செய்து, மகிழின் அம்மா கோமா நிலைக்கு போயிருக்கலாம். மருத்துவமனையில் உயிருக்கு போராடிட்டு இருக்க கூடும்...''

''நான் உபயோகித்த மயக்க மருந்து வீரியம் குறைந்தது; அதற்கெல்லாம் வாய்ப்பில்லை...''

''இந்த காட்டுக்குள், நாம் இருவர் மட்டும் செங்கிஸ்கானுடன் வாழ முடியுமா... இங்கு யானை, கரடி எல்லாம் அதிகம் என, கேள்வி பட்டுள்ளேன்...''

அச்சமயம், மைனா ஒன்று பறந்து வந்து, வீட்டு வாசலில் அமர்ந்தது.

''மனிதர்களை விட மோசமான மிருகம் ஏது... கவலைப்படாமல், மகிழ்ச்சியாக இருப்போம்; ஆறு மாதத்துக்குள், வடகிழக்கு மாநிலமான மேகாலயா பக்கம் சென்று விடலாம்...''

''உங்க வேலை...''

''என் கால் துாசுக்கு சமம். வடகிழக்கில் காமாக்யா கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுவோம்; பின், அங்கிருந்து, 152 கி.மீ., துாரத்தில் இருக்கும் சிரபுஞ்சிக்கு செல்வோம்; அங்கு, ஏதாவது ஒரு கிராமத்தில் வசிக்கலாம். காவல்துறையால் கண்டுபிடிக்க முடியாது...''

''கோவையில் இருந்து, 160 கி.மீ., துாரம் எங்கேயும் நிறுத்தாமல், ஓட்டி வந்துள்ளீர். நான்கு மணி நேர பயணம். செங்கிஸ்கானுக்கு தண்ணீர் கூட கொடுத்து இருக்க மாட்டீர்; முதலில், மூட்டையை அவிழ்த்து, அதை சமாதானம் செய்யுங்கள்...''

வேனில் இருந்து மூட்டையை இறக்கி அவிழ்த்தான் காண்டீபன்.

கோபத்துடன் பாய்ந்தது செங்கிஸ்கான்.

சற்று விலகாமல் இருந்திருந்தால் காண்டீபனை கடித்து குதறி இருக்கும்.

''என்னையா கடிக்கப் பார்க்கிறாய்...''

கோபப் பார்வையை தாழ்த்தியது செங்கிஸ்கான்.

ஸ்மார்ட் ஹார்ட் சிக்கனும், முட்டையும் கலந்த நாய் உணவான, 'ஸ்மார்ட் ஹார்ட்' ஊட்டினான்.

தின்ன மறுத்தது.

''செங்கிஸ்கான்... உன்னைத் தர, மடிப் பிச்சையாக, மகிழ் குடும்பத்திடம் கெஞ்சி கேட்டேன். அவர்கள் ஒத்துவராததால், மயக்க மருந்தை தெளித்து, பின் கடத்தி இருக்கேன்; தற்சமயம், மலை கிராமத்தில் இருக்கிறோம். இடையில் வந்தவர்கள், இடையிலே செல்வர். இனி, நாங்களும், நீயும் மட்டுமே... வா ராஜவாழ்க்கை வாழ்வோம்...''

'நீ செய்தது பெரும் குற்றம்...'

''இந்த குற்றத்தில் யாரும் இறக்கவில்லை. ரத்தக் காயமும் அடையவில்லை; அந்த குடும்பத்தின் பணம், நகை எதுவும் திருடு போகவில்லை. ஒரு வாரம் பிரிந்து மீண்டும் சேர்ந்துள்ளோம்...''

'எனக்கு, அரசு பணி ஓய்வு கொடுத்துள்ளது. அதிகாரப்பூர்வமாக மகிழ் குடும்பத்துக்கு தத்து கொடுத்து விட்டது. பயிற்சியாளர், மோப்பநாய் உறவு காலாவதி ஆகி விட்டது; என்னை, நீ கடத்தி வந்தது தண்டனைக்குரிய இழிவான செயல்...'

''உனக்காக, இந்த இழிவான செயலை நுாறு முறை வேண்டுமானாலும் செய்வேன்...''

'நியதியும், ஒழுங்கும் இல்லாமல் வாழ்வது வீண்...'

''சில நாள், மகிழ் நினைப்பில் இருப்பாய். பின், என் அன்பு மழையில் நனைந்து, பழைய செங்கிஸ்கானாய் மாறி விடுவாய்...''

'நான் குற்றங்களுக்கும், அதை செய்வோருக்கும் எதிராக செயல்படுவேன். சட்டத்தை மீறும் அன்பு, எனக்கு தேவையில்லை...'

''மனிதன் வகுத்த சட்டமும், நீதியும் உன்னை போன்ற வளர்ப்பு மிருகங்களுக்கு எப்படி பொருந்தும்...''

மவுனமாகி, நான்கு கால்களையும் உள்ளடக்கி, ஓட்டுக்குள் சுருங்கிய ஆமை போல கிடந்தது செங்கிஸ்கான்.

உண்ணாவிரதம் எடுத்த செங்கிஸ்கானை, கனத்த இரும்பு சங்கிலியால் கழுத்தில் கோர்த்து, ஒரு துாணில் கட்டினான் காண்டீபன்.

''என் குற்றத்தை மன்னித்து மீண்டும், ஞானத் தந்தையாக ஏற்றுக் கொள்... உன்னை விட்டால், எனக்கு யார் இருக்கின்றனர் செல்லமே...''

திடீரென செங்கிஸ்கான் கால்களில் விழுந்து அழுதான் காண்டீபன்.

கருங்கல் சிற்பம் போல் இறுகி நின்றது செங்கிஸ்கான்.

- தொடரும்...

ஆர்னிகா நாசர்






      Dinamalar
      Follow us