PUBLISHED ON : ஜூன் 21, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்
பாஸ்தா - 1 கப்
பால் - 3 கப்
சர்க்கரை - 100 கிராம்
நெய், தேங்காய் - சிறிதளவு
முந்திரி, ஏலக்காய் பொடி, தண்ணீர் - தேவையான
அளவு.
செய்முறை:
பாலில் சர்க்கரை கலந்து பாத்திரத்தில் கொதிக்க விடவும். நன்றாக அரைத்த தேங்காய், முந்திரி பருப்பு விழுதை அதில் சேர்க்கவும். பின், தண்ணீரில் வேக வைத்த பாஸ்தாவை போட்டு கொதிக்க விடவும். ஏலக்காய் பொடி, நெய்யில் வறுத்த முந்திரி கலந்து இறக்கவும்.
சுவை மிக்க, 'பஞ்சாபி பாஸ்தா பாயசம்!' தயார். அனைத்து வயதினரும் விரும்பி பருகுவர்.
- எம்.ஏ.அமுதா, திருச்சி.
தொடர்புக்கு: 97503 33265