sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பிளாஸ்டிக் மாசு!

பிளாஸ்டிக் மாசு!

பிளாஸ்டிக் மாசு!


PUBLISHED ON : அக் 18, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 18, 2025


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலகில் சுற்றுச்சூழல், ஆரோக்கியத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது, பிளாஸ்டிக். நிலம், நீரை மாசுபடுத்தி, உடலில் புகுந்து நோய்களை உருவாக்குகிறது. இந்த அபாயத்தை புரிந்து, உடனடியாக செயல்பட வேண்டியது அவசியம்.

ஒவ்வொரு ஆண்டும் உலகில் பல ஆயிரம் கோடி கிலோ பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுகிறது. ஏற்கனவே பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்கள் குப்பையாக வீசப்படுகிறது. மைக்ரோ பிளாஸ்டிக் என்ற சிறு துகள்கள் எங்கும் பரவி ஆபத்தை விளைவிக்கிறது. இந்த துகள் கடற்கரை, கடல் நீரில் பரவுகிறது. இதனால் கடல் உயிரினங்கள் பெருமளவு பாதிக்கப்படுகின்றன. கடல் சூழலும் கடுமையாக மாசடைகிறது.

நெசவுத் தொழிலில் பாலியஸ்டர், அக்ரிலிக், நைலான் பயன்பாடு, 60 சதவிகித ஆடைகளில் உள்ளன. இது, துவைக்கும் போது மைக்ரோ பிளாஸ்டிக் துகளாக மாறி கேடு விளைவிக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபை, 2020ல் வெளியிட்ட அறிக்கையில் இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதை குறைக்க ஆடை அணியும் பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என பரிந்துரைத்துள்ளது.

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பதும், மறுசுழற்சியை ஊக்குவிப்பதும் மாற்றத்தை ஏற்படுத்தும். ஒவ்வொருவரும் அன்றாட செயலில் சிறு மாற்றங்களை செய்தால், சுற்றுச்சூழலை பாதுகாக்கலாம். அதன் வழியாக ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.

- வ.முருகன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us