
குரங்கு இனங்கள் அளவு, உருவத்தில் வித்தியாசமாக உள்ளது; மனிதனைக் காட்டிலும், பெரிய உருவம் உடையவையும் இருக்கின்றன.
சிறிய அளவிலும் வாழ்கின்றன. அபூர்வ இனங்களும் உள்ளன.
அந்த வகையில், 'பிக்மி மர்மோசெட்' என்ற குட்டி குரங்கு பிரசித்தமானது. தென் அமெரிக்கா அமேசான் காடுகளில், இந்த இனம் உள்ளது. ஒரு கூட்டத்தில், ஒன்பது குரங்குகள் வரை இருக்கும். கோழி குஞ்சு அளவில், 100 கிராம் வரை எடையுள்ளது. உயரம், 152 மி.மீ., வரை தான் இருக்கும். ஆள்காட்டி விரலை விட, சற்று உயரமாக வளர்ந்திருக்கும்.
இதன் விருப்ப உணவு மரப்பிசின். முருங்கை மரத்தில் பார்க்கலாம். இந்த இனம் தற்போது, வேகமாக அருகி வருகிறது. அது வாழும் காடுகளை அழிப்பது தான் இதற்கு காரணம். மிகவும் குட்டியாக இருப்பதால், நாய், பூனை போல செல்ல பிராணியாக வளர்க்கவும் பிடிக்கின்றனர். இந்த இன குரங்கை பாதுகாப்பது நம் கடமை.
- மு.நாகூர்