தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ராகி பணியாரம்!

ராகி பணியாரம்!

ராகி பணியாரம்!


PUBLISHED ON : நவ 29, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 29, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவையான பொருட்கள்:

கேழ்வரகு மாவு -- 1 கப்

அரிசி மாவு - 0.25 கப்

வெல்லம் - 1 கப் தேங்காய் துருவல், முந்திரி, ஏலக்காய் துாள், நெய் - தேவையான அளவு

உப்பு - சிறிதளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவையும், அரிசி மாவையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின், துருவிய வெல்லம் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து மீண்டும் கலக்கவும். இந்தக் கலவையில் கொஞ்சம், கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து, கட்டி இல்லாமல் தோசை மாவு பதத்திற்கு கலக்கவும். சிறிதளவு உப்பு, ஏலக்காய் துாள், நறுக்கிய முந்திரி ஆகியவற்றைச் சேர்த்து கலக்கி, 10 நிமிடங்கள் ஊற விடவும்.

பணியார சட்டியை அடுப்பில் வைத்து சூடாக்கி, ஒவ்வொரு குழியிலும் சிறிது நெய் தடவி, குழிகளின் முக்கால் பாகம் மாவை நிரப்பவும். ஒரு நிமிடம் கழித்து, பணியாரத்தைத் திருப்பிப் போட்டு, மறுபுறமும் வேக விடவும். இரண்டு பக்கமும் பொன்னிறமாக வெந்ததும், சூடான பணியாரத்தை எடுத்துப் பரிமாறலாம். சுவையான மற்றும் ஆரோக்கியமான 'ராகி பணியாரம்!' தயார்!



- தே.சந்தியா, விருதுநகர்.

தொடர்புக்கு: 89256 07346.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us