தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/நடையாய் நடந்து...

நடையாய் நடந்து...

நடையாய் நடந்து...


PUBLISHED ON : நவ 14, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 14, 2026


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை மாவட்டம், பெரியபோது கிராம ஆரம்ப பள்ளியில், 1955ல், 5ம் வகுப்பை முடித்து, சிரமங்களுடன் ஆனைமலை அரசு உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தேன். அது, என் கிராமத்தை விட்டு, 8 கி.மீ., துாரத்தில் இருந்தது. போக்குவரத்துக்கு சாலை வசதி இல்லாத நிலையில், ஒவ்வொரு நாளும் காட்டில் நடந்து சென்று வந்தேன்.

காலை, 7:00 மணிக்கு புறப்பட்டு, 9:30க்கு பள்ளியை அடைவேன். வகுப்பு முடிந்தவுடன் நடந்தே சென்று மாலை, 7:00 மணிக்கு பிறகே வீடு போய் சேர்வேன். இவ்வாறு முயன்று படித்து எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு எழுதினேன். தேர்வு முடிந்த, 10 நாட்களுக்கு பின், தன்னை சந்திக்க கூறி தகவல் அனுப்பியிருந்தார், பள்ளி தலைமையாசிரியர் பழனிச்சாமி.

அதை ஏற்று தலைமையாசிரியரை அவரது வீட்டில் சந்தித்தேன். என் குடும்ப நிலையை கேட்டறிந்து மேற்படிப்புக்கு உதவுவதாக வாக்கு கொடுத்தார். அதன்படி, பொள்ளாச்சி கல்லுாரியில் பி.எஸ்சி., கணிதம் படித்தேன். தொடர்ந்து, ஆசிரியர் பயிற்சியில் சேரவும் பேருதவி செய்தார், தலைமையாசிரியர். படிப்பை முடித்து அரசு பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர்ந்து உயர்ந்தேன்.

என் வயது, 83. தலைமையாசிரியராக பணி உயர்ந்து ஓய்வு பெற்றேன். பள்ளியில் படித்த நாட்களில் என் ஒழுக்கம், கடும் உழைப்பு மற்றும் ஆர்வம் கண்டு உயர் படிப்புக்கு உதவி, வாழ்வில் மேம்பட வழிகாட்டிய தலைமையாசிரியர் பழனிச்சாமியை நன்றியுடன் வணங்குகிறேன்.

- பி.கே.பழனியப்பன், கோவை.

தொடர்புக்கு: 99449 09484

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us