
நம் நாட்டின் தேசிய விலங்கு புலி.
இது தேர்வானது குறித்து பார்ப்போம்...
தேசிய விலங்காக தேர்வு பெறும் விலங்கு பலம், பாரம்பரியத்தை பறைசாற்ற வேண்டும். கம்பீரமாக காட்சி தர வேண்டும். அதுவே, தேசத்தின் அங்கீகாரமாக திகழும். இதற்கு உகந்ததாக ராயல் பெங்கால் புலி, 1972ல் தேர்வு செய்யப்பட்டது. அதிகாரப்பூர்வமாக, 1973ல், தேசிய விலங்காக அங்கீகரிக்கப்பட்டது. அதற்கு முன் வரை, தேசிய விலங்காக, சிங்கம் இருந்தது.
புலி பாதுகாப்புக்கு, 'புராஜெக்ட் டைகர்' என்ற திட்டம் அதே ஆண்டு கொண்டு வரப்பட்டது. இதன் வழியாக, புலி இனத்தை அழிவிலிருந்து பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட துவங்கியது அரசு. இந்தியாவில், 3,682 புலிகள் உள்ளதாக, 2023ல் நடந்த கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இந்தியா மட்டுமின்றி, அண்டை நாடான வங்க தேசம், ஆசிய நாடுகளான தென் கொரியா, வியட்நாம், மலேசியாவுக்கும் தேசிய விலங்காக திகழ்கிறது புலி.
- வி.பரணிதா