sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

தெரிஞ்சுக்கோங்க!

/

தெரிஞ்சுக்கோங்க!

தெரிஞ்சுக்கோங்க!

தெரிஞ்சுக்கோங்க!


PUBLISHED ON : பிப் 01, 2025

Google News

PUBLISHED ON : பிப் 01, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* இந்திய ரிசர்வ் வங்கி லோகோவில் புலி, பனைமரம் காணப்படுகிறது. இது, ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி தயாரித்த தங்க நாணய மாதிரியில் அமைந்தது

* இந்திய அரசியலமைப்பு சாசனம் எழுதும் முன், 60 நாடுகளின் அரசியலமைப்பு சாசனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. நம் நாட்டுக்கேற்ப, மாற்றம் செய்யப்பட்டன. அரசியலமைப்பு சாசனம் வரைய, 64 லட்சம் ரூபாய் செலவு ஆனது

* பிளாசிப் போரில், 'பிளாசி' என்ற வார்த்தை, ஆங்கிலேயரின் உச்சரிப்பால் மாறியது. அதன் உண்மை பெயர் பலாஷி; இது ஒரு இடப் பெயரைக் குறிக்கிறது; பலாஷ் என்ற மர பெயரில் உருவானது. அழகிய மலர்களை உடையது இந்த மரம். இதிலிருந்து தான், ஹோலி பண்டிகை கொண்டாடப் பயன்படுத்தப்படும் குலால் என்ற பொடி தயாரிக்கப்படுகிறது

* ஹைதராபாத், கோல்கோண்டா கோட்டை நுழைவு வாயிலில் குவிந்த கூரையின் கீழ் நின்று கை தட்டினால், 1 கி.மீ., துாரத்தில், உயரத்தில் கட்டப்பட்டுள்ள பாலா ஹிஸார் மாடத்தில், அந்த ஒலி கேட்கும். அந்த காலத்தில், சந்தேகிக்கும் படியான நிகழ்வு நடந்தால் கை தட்டினால் போதும். அது, மாடத்தில் ஒலித்ததும், படைகள் தயார் நிலையில் வைக்கப்படும். பழங்கால வடிவமைப்பு பிரமிப்பு தருகிறது.

- மு.நாவம்மா






      Dinamalar
      Follow us