
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 200 கிராம்
காய்ந்த மிளகாய் - 2
தக்காளி - 1
சின்ன வெங்காயம் - 1 கப்
தேங்காய், கடுகு, உளுந்தம் பருப்பு,
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு, எண்ணெய், தண்ணீர் -
தேவையான அளவு.
செய்முறை:
துவரம் பருப்பு, காய்ந்த மிளகாயை, இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். அதில், தக்காளி, தேங்காய் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
வாணலியில், எண்ணெய் சூடானதும், கடுகு, உளுந்தம் பருப்பு, நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை தாளித்து, அரைத்த கலவை, உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பின், கொத்தமல்லித்தழை துாவவும்.
சத்து மிக்க, 'துவரம் பருப்பு சட்னி!' தயார். இட்லி, தோசைக்கு பக்க உணவாக தொட்டுக் கொள்ளலாம். மிகவும் ருசியாக இருக்கும்.
- ஆர்.ஜமுனாராணி, விருதுநகர்.