
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உப்பு இல்லாத உணவு குப்பைக்கு செல்லும். உப்பின் அளவு குறைந்தாலும், கூடினாலும் உணவின் சுவை சிறக்காது.
கடல் நீரில் இருந்து பிரிக்கப்படும் தாது பொருள் உப்பு. உணவை பதப்படுத்தவும் உதவும். பிளாஸ்டிக், பேப்பர், பல்பு தயாரிப்பிலும் உதவுகிறது.
உலகளவில் எடுக்கப்படும் உப்பில், 6 சதவீதம் மட்டுமே உணவிற்கு பயன்படுகிறது. ஒரு நாளிற்கு, ஐந்து கிராம் உப்பையே ஒருவர் உபயோகிக்க வேண்டும்.
உப்பு மிகுந்தாலும், குறைந்தாலும் நோய்கள் ஏற்படுவதுடன், உயிருக்கு ஆபத்து நேரிடும்.
கடலுப்பில் அயோடின் சிறிய அளவில் இருக்கிறது. உப்பு தாகத்தை அதிகப்படுத்தி, நீர் ஆகாரத்தை உடலுக்கு அதிகமாக ஏற்கச் செய்யும். உப்பு நீர் வெட்டுக் காயங்களில் பட்டால் உறுத்தலை ஏற்படுத்தும். அளவோடு உணவில் உபயோகப்படுத்துவது நல்லது.
உப்பை மட்டும் அல்ல அமிர்தமே ஆனாலும், அளவுடன் உண்பதே சிறந்தது.
- எம்.நிர்மலா