PUBLISHED ON : டிச 23, 2023

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
பனங்கிழங்கு - 100 கிராம்
தேங்காய் துருவல் - 4 தேக்கரண்டி
மிளகாய் - 4
மஞ்சள் துாள் - 2 தேக்கரண்டி
உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
பனங்கிழங்கை தோல் நீக்கி, சுத்தம் செய்து, தண்ணீர், மஞ்சள் துாள், உப்பு சேர்த்து, நன்கு வேக வைத்து, சிறு துண்டுகளாக்கவும். இதனுடன், துருவிய தேங்காய், மிளகாய், உப்பு சேர்த்து, அரைத்து உருண்டைகளாக்கவும்.
சுவை மிக்க, 'பனங்கிழங்கு கார உருண்டை!' தயார். சத்து மிக்கது. அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்!
- சுந்தரி காந்தி, சென்னை.
தொடர்புக்கு: 70102 88530