
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:துாதுவளை கீரை - 1 கப்உளுந்தம் பருப்பு - 3
தேக்கரண்டிகாய்ந்த மிளகாய் - 5பூண்டு - 10 பல்பெருங்காயம், மிளகு, சீரகம்,
புளி - சிறிதளவுநல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில் நல்லெண்ணெய் காய்ந்ததும், சுத்தம் செய்த துாதுவளை கீரையை வதக்கவும்.
மிளகு, சீரகம், உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு, பெருங்காயம் மற்றும் புளியை வறுத்து ஆற விடவும். ஆறியதும், வதக்கிய கீரை, உப்பு சேர்த்து விழுதாக அரைக்கவும்.
சுவை மிக்க, 'துாதுவளை கீரை சட்னி' தயார். சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். சளி, ஆஸ்துமா அவதியை போக்கும்.
- எஸ்.லோகநாயகி, ஈரோடு.
தொடர்புக்கு: 97900 72384