sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

இளஸ் மனஸ்! (231)

/

இளஸ் மனஸ்! (231)

இளஸ் மனஸ்! (231)

இளஸ் மனஸ்! (231)


PUBLISHED ON : ஜன 06, 2024

Google News

PUBLISHED ON : ஜன 06, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்புள்ள அம்மா...

என் வயது, 15; பிரபல ஆங்கிலப் பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவி. தம்பிக்கு வயது, 10; 5ம் வகுப்பு படிக்கிறான். தங்கைக்கு வயது, 8; 3ம் வகுப்பு படிக்கிறாள். வேலைக்கு செல்கின்றனர் பெற்றோர்.

எங்கள் வீடு முழுக்க ஐரோப்பிய, 'கிளாசெட்' பொருத்தப்பட்டிருக்கிறது. பெற்றோருக்கு ஆளாளுக்கு ஒரு கழிப்பறை. நான் தம்பி, தங்கை என மூவரும் ஒரு கழிப்பறையை பயன்படுத்துகிறோம்.

எங்கள் கழிப்பறையை மூத்தவளான நான் தான் ஒவ்வொரு வாரமும், கழுவ வேண்டும் என, சித்திரவதை செய்கிறார் அம்மா. அதிலிருந்து எப்படி தப்பிப்பது...

இப்படிக்கு,

காஞ்சனா திருலோகசந்தர்.



அன்பு மகளே...

அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறீர் என நம்புகிறேன். நகராட்சி, பேரூராட்சி, தனி வீடுகளில், கழிப்பறை சுத்தம் செய்ய சுகாதார ஊழியர்கள், 30 ஆண்டுகளுக்கு முன் தினமும் வந்து சென்றனர். இப்போது, 'தன் கையே தனக்கு உதவி' என்றாகியிருக்கிறது.

கழிப்பறை இருவிதங்களாய் அமைக்கப்படுகின்றன.

 இந்திய முறைப்படி குத்துக்காலிட்டு அமர்ந்து மலஜலம் கழிப்பது; இதில், ஒரு குழி, இரு காலடி வடிவில் செவ்வகங்கள் அமைந்திருக்கும்

 ஐரோப்பிய வகை; அப்படியே அமர்ந்து மலஜலம் கழித்து பின், பிளஷ் அவுட் உபயோகிப்பது; வயோதிகர்களும், கால் மடக்க முடியாத நோயாளிகளும், இவ்வகை கழிப்பறையை பயன்படுத்துகின்றனர். இப்போது, நகர் புறங்களில் இவ்வகை கழிப்பறைகளே அதிகம்.

கழிப்பறை இருக்கையில், நோய் பரப்பும் பாக்டீரியாக்களும், வைரஸ்களும் உயிர் வாழ்கின்றன. கழிப்பறையில் இருக்கும் நுண்ணுயிரிகளின் பட்டியலை பார்ப்போம்...

ஈகோலை, சிஜெல்லா, பாக்டீரியா, ஸ்டரப்டோக்காக்கஸ், ஸ்டபைலோகாக்கஸ், இன்ப்ளூயன்சா வைரஸ், ஜெனிடல் ஹெர்பிஸ் வைரஸ், கைலமிடியா, எஸ்சேரிசியா கோலை, சால்மோனல்லா, ஹெபடைடிஸ், ரோட்டா வைரஸ், கிரிப்டோ ஸ்ப்ரோடியம், ஜியார்டியா மற்றும் அஸ்காரிஸ்...

இந்த நுண்ணுயிரிகளில் சில, கழிப்பறை இருக்கையில், ஒன்பது நாட்கள் வரை உயிர் வாழும். சிறுநீர் கோப்பையில், சார்ஸ் கோவ் - 2, ஸ்மால் பாக்ஸ், அடினோ வைரஸ், ராபிஸ் என்ற நுண்ணுயிரிகள் வாழ்கின்றன.

உன் வீட்டு கழிப்பறையை நீ சுத்தம் செய்யாமல், வேறு யார் செய்வார். வீட்டுக்கு மூத்தவள் நீ; நீயும், தம்பி, தங்கை உபயோகிக்கும் கழிப்பறையை முகம் சுளிக்காமல் சுத்தம் செய்யவும். அதற்கு எளிய பயிற்சிகள் உள்ளன.

நைலான் பிரஷ் வைத்து, முதலில், தரை, யூரினல், வாஷ்பேஷின், கிளாசெட்டை நன்றாக தேய்த்து சுத்தம் செய். பின், டெட்டால் அல்லது கருப்பு பினாயில் ஊற்றி அலசி கழுவு.

இரு வாரங்களுக்கு ஒருமுறை கழிப்பறைக்குள் டெட்டால் ஸ்ப்ரே செய்; துர்நாற்றம் ஒழிக்க, ஓடோனில் தொங்க விடு. கழிப்பறையை பயன்படுத்திய பின், திரவ சோப் அல்லது சானிடைசர் கொண்டு, இடது கையை கிருமி நீக்கம் செய்.

தேச தந்தை காந்திஜி செய்ததை தானே நீ செய்யப் போகிறாய். சுய உதவியே நாட்டின், வீட்டின் தன்னிறைவு கண்ணம்மா. இது போன்ற பணிகளை முழுமையாக செய்ய கற்றுக்கொள்.

- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.






      Dinamalar
      Follow us