PUBLISHED ON : பிப் 03, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
கம்பு மாவு - 1 கப்
தேங்காய் பால் - 1 கப்
சர்க்கரை - 2 கப்
ஏலப்பொடி, நெய், தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
கம்பு மாவுடன், ஏலப் பொடி சேர்த்து, தண்ணீர் கலந்து, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து ஊற வைக்கவும். பின், நெய் தடவி சிறு உருண்டைகளாக்கி, இட்லி தட்டில் வேக வைக்கவும்.
சர்க்கரை சேர்த்து காய்ச்சிய தேங்காய் பாலில், கம்பு மாவு உருண்டைகளை போடவும். சுவையான, 'கம்பு தேங்காய் பால் கொழுக்கட்டை!' தயார். அனைத்து வயதினரும் உண்ண ஏற்றது.
- உஷா முத்துராமன், மதுரை.
தொடர்புக்கு: 99655 92216