
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
கற்பூரவல்லி இலை - 15
பச்சை மிளகாய் - 2
உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
தேங்காய், இஞ்சி, மிளகு, சீரகம், பெருங்காயம் - சிறிதளவு
கடுகு, உளுந்தம் பருப்பு, எண்ணெய், தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில், எண்ணெய் சூடானதும், மிளகு, சீரகம், உளுந்தம் பருப்பு, பெருங்காயத்தை வறுக்கவும். சுத்தம் செய்த கற்பூரவல்லி இலை, பச்சை மிளகாயை தனியாக வதக்கவும். இவை ஆறியதும், தோல் நீக்கிய இஞ்சி, துருவிய தேங்காய், உப்பு, தண்ணீர் சேர்த்து அரைக்கவும். எண்ணெயில், கடுகு, உளுந்தம் பருப்பு தாளித்து அதில் கொட்டவும்.
சுவை மிக்க, 'கற்பூரவல்லி சட்னி!' தயார். இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ளலாம். ஜீரண சக்தியை அதிகரிக்கும். சளித் தொல்லை நீக்கி நிவாரணம் தரும்.
- எம்.வசந்தா, சென்னை.