
மருத்துவதுறையில் ஊசி என குறிப்பிடுவது, மருந்தை உடலுக்குள் செலுத்தும் மெல்லிய கருவியாகும். ரத்த மாதிரி எடுப்பதற்கும் பயன்படுகிறது. இது, சிரிஞ்ச் என்ற ஊசியின் அடிப்பகுதியாகும். குத்தும் வகையில் உள்ள ஊசி தனிப்பகுதி.
கிரேக்க மொழியில், 'சிரிஞ்ச்' என்றால், குழாய் என பொருள். ரோமானியர் கி.பி., முதல் நூற்றாண்டில் சிரிஞ்ச் பயன்படுத்தி உள்ளனர். இது பற்றிய தகவல்கள், டி.மெடிசினா என்ற நுாலில் உள்ளன.
அமெரிக்கா, நியூயார்க்கை சேர்ந்த லெட்டியா மப்போர்ட் கீர், சிரிஞ்ச் கண்டுபிடிப்புக்கு காப்புரிமையை, 1899ல் பெற்றார். அந்த ஊசி, ஒவ்வொருவரும், தாமாகவே பயன்படுத்திக் கொள்ளும் வகையில், தயாரிக்கப்பட்டு இருந்தது.
ஐரோப்பிய நாடான இங்கிலாந்தைச் சேர்ந்த சான்ஸ் சகோதரர்கள் முதன் முதலில், முழுதும் கண்ணாடியால் ஆன, சிரிஞ்சை கண்டுபிடித்தனர். ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட டிஸ்போசபிள் சிரிஞ்சை கண்டுபிடித்தார் சார்லஸ் ரத்தவுசர்.
ஆஸ்திரேலிய நாடான நியூசிலாந்தை சேர்ந்த காலின் முர்டோக், பிளாஸ்டிக் சிரிஞ்சை மேம்படுத்தி காப்புரிமை பெற்றார். பின், பல விதமான சிரஞ்சுகள் தயாரிக்கப்பட்டன.
சார்லஸ் பிரவாஸ், அலெக்ஸாண்டர் வுட் இணைந்து தயாரித்த, ஹைபோடெர்மிக் சிரிஞ்ச் தற்போது சிறந்ததாக கருதப்படுகிறது; இந்த வகை, ஊசியுடன் சேர்ந்து தயாரிக்கப்படுகிறது. இதை பயன்படுத்தும் போது, வலி இருப்பதில்லை. ரத்தம் வீணாவதும் தடுக்கப்படும்.
இந்த ஊசி பயன்பாடு பரவலாகி விட்டால், வலி பற்றிய பயம் இருக்காது.

