sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இடைவெளி!

இடைவெளி!

இடைவெளி!


PUBLISHED ON : மார் 23, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 23, 2024


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை மாவட்டம், சோழவந்தான் ராணி மங்கம்மாள் நடுநிலைப் பள்ளியில், 1964ல், 5ம் வகுப்பு படித்தேன். தலைமையாசிரியராக இருந்த பரமேஸ்வரன், கண்டிப்பானவர்; பொது அறிவை வளர்க்கும் விதமாக தகவல்களை அவ்வப்போது கூறுவார்.

விடுமுறை நாட்களில், நண்பர்களுடன் பக்கத்தில் இருந்த ரயில் நிலையத்துக்கு செல்வேன். அங்கு, நடைமேடை மற்றும் ரயில் பாதையில் கிடக்கும் வெற்று தீப்பெட்டிகளில் படங்களை சேகரிப்போம்.

ஒருநாள், அங்கு வந்த தலைமையாசிரியர் எங்கள் செயல் கண்டு, 'விடுமுறை நாளில் வீட்டுப்பாடங்களை படிக்காமல், உயிருக்கு ஆபத்தான செயலை செய்கிறீர்களே... திடீரென கூட்ஸ் ரயில் வண்டி வந்தால், என்ன செய்வீர். இனிமேல், இது போன்று பார்த்தால் பள்ளியை விட்டே துரத்தி விடுவேன்...' என எச்சரித்தார்.

பின், கனிவுடன், 'ரயில் பாதையில் தண்டவாள இணைப்புகளுக்கு இடையில், சிறியதாக ஒரு இடைவெளி விடப்பட்டுள்ளதை கவனித்தீரா... அதற்கான காரணத்தை கூறுங்கள்...' என வினவினார்.

தெரியாமல் விழித்தது கண்டு, 'கண்முன் நடந்து வரும் அறிவியல் செயலை அறியாமல் இருக்கிறீர்... கோடை காலத்தில் வெப்ப அதிகரிப்பால், இரும்பு போன்ற உலோகங்கள் விரிவடையும். தண்டவாளத்தில் இடைவெளி விடா விட்டால் நெளிந்து பாதிப்படைந்து விபத்து ஏற்படும்... அதை தவிர்க்கவே இந்த ஏற்பாடு...' என்று அறிவுரைத்தார்.

நல்லறிவு பெற்றோம்.

தற்போது, என் வயது, 70; தமிழக அரசில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். அன்று ரயில் நிலையத்தில் நிகழ்ந்தது பசுமையாய் மனதில் படர்ந்துள்ளது. அறிவார்ந்த அந்த தலைமை ஆசிரியரை போற்றி வாழ்கிறேன்.

- கு.கணேசன், மதுரை.

தொடர்புக்கு: 99526 82637


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us