sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/முதல் உதவி!

முதல் உதவி!

முதல் உதவி!


PUBLISHED ON : ஏப் 13, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 13, 2024


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துாங்கி எழுந்து வாசலுக்கு வந்தான் விமல்.

வீட்டு முன், ஒரே பரபரப்பாய் இருந்தது.

எதிர் வீட்டில் புதிதாக குடி வந்திருந்தார் வருண். அவர் காரை சூழ்ந்தபடி கூட்டம் நின்றது.

விமலின் அம்மாவும், அதில் இடம் பெற்றிருந்தார்.

அருகில் சென்று விசாரித்தான் விமல்.

நாய் மீது கார் மோதியது தெரியவந்தது.

காலில் காயம் பட்டு வலியால் கத்திக்கொண்டிருந்தது நாய்.

'தெருவில் சற்று கவனத்துடன் ஓட்டக் கூடாதா...'

வசைப்பாடினர் அங்கு நின்றவர்கள்.

நாயின் சொந்தக்காரர் கடும் கோபத்தில் இருந்தார். வருணுடன் வார்த்தை தடித்தது. கைகலப்பு வருவது போல் இருந்தது.

நிலமையை உன்னிப்பாக கவனித்திருந்த விமலின் தந்தை அங்கு வந்தார்.

''வார்த்தையை கொட்டினால் அள்ள முடியாது; சற்று பொறுங்கள்...''

இருவரையும் சமாதானப்படுத்த முயன்றார்.

அவரது அக்கறையான பேச்சில் நியாயம் இருப்பதை உணர்ந்து அமைதி அடைந்தனர்.

உடனே, வீட்டில் இருந்த முதல் உதவி பெட்டியை எடுத்து வந்தான் விமால்.

வலியில் துடித்த நாயின் காயத்தை பஞ்சால் துடைத்தான். மருந்து போட்டான். நிவாரணம் கிடைத்ததும் நன்றியுடன் கூட்டத்தை பார்த்தது. பின் மெதுவாக நொண்டியபடி நடந்தது.

கூடியிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.

மாலை, 6:00 மணி -

தெருவில் காலையில் இருந்த பரபரப்பு அடங்கி அமைதியாக காணப்பட்டது.

தொலைவில் தட்டு தடுமாறி ஓடியது அந்த நாய். வலி குறைந்திருந்தது போல் தெரிந்தது.

குழந்தைகளே... அவசரத்தில் கோபப்படுவதால் பயன் எதுவும் இல்லை. நிதானமாக சிந்தித்து செயல்படுவதே அறிவுப்பூர்வமான செயல்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us